திருமழிசை ஆழ்வார் தனியன்கள்
--வெ.ராமன் 07:34, 31 ஜூலை 2006 (UTC)
திருச்சந்த விருத்தத் தனியன்கள் திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை தரவு கொச்சகக் கலிப்பா தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர்* கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்* திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே. இருவிகற்ப நேரிசை வெண்பா உலகும் மழிசையு முள்ளுணர்ந்து* தம்மில் புலவர் புகழ்க்கோலால் தூக்க*- உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும்* மாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது. திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்