தவம்
திருக்குறள் > துறவறவியல்
- 261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
- அற்றே தவத்திற் குரு.
- தனக்கு எத்தகைய துன்பம் நேரிடினும் பிற உயிரிகளுக்கு தீங்கு செய்யாமலிருப்பதே தவத்தின் பொருளாகும்.
- 262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
- அஃதிலார் மேற்கொள் வது.
- தவம் மிகுந்த மனவுறுதி உடையவர்க்கே வாய்க்கும்.அத்தகைய உறுதியற்றவர்கள் தவத்திற்க்கு முயலுவது வீணாகவே முடியும்.
- 263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
- மற்றை யவர்கள் தவம்.
- தவத்தில் சிறந்த துறவிகளுக்காக கூட நம் சேய்யவேன்டிய தவத்தை மறக்க கூடாது.
- 264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
- எண்ணின் தவத்தான் வரும்.
- 265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
- ஈண்டு முயலப் படும்.
- 266. தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
- அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
- 267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
- சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
- 268. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
- மன்னுயி ரெல்லாந் தொழும்.
- 269. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
- ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
- 270. இலர்பல ராகிய காரணம் நோற்பார்
- சிலர்பலர் நோலா தவர்.