தகையணங்குறுத்தல்
திருக்குறள் > களவியல்
- 1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
- மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
- 1082. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
- தானைக்கொண் டன்ன துடைத்து.
- 1083. பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
- பெண்டகையால் பேரமர்க் கட்டு.
- 1084. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
- பேதைக்கு அமர்த்தன கண்.
- 1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
- நோக்கமிம் மூன்றும் உடைத்து.
- 1086. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
- செய்யல மன்இவள் கண்.
- 1087. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
- படாஅ முலைமேல் துகில்.
- 1088. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
- நண்ணாரும் உட்குமென் பீடு.
- 1089. பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
- அணியெவனோ ஏதில தந்து.
- 1090. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
- கண்டார் மகிழ்செய்தல் இன்று.