செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/வேம்பு

மிகவும் உயரமாக கிளைகளுடன் வளர்கிறது.நல்ல நிழல் தருகிறது.இதன் கொட்டைகளில் இருந்து வேப்ப எண்ணெய் எடுக்கப்படுகிறது.வேப்ப எண்ணெய் மருத்துவ குணம் (கிருமி நாசினி) கொண்டது.இந்துக்கள் வேப்ப இலையை புனிதமானதாகக் கருதுகிறார்கள்.மாரியம்மன் வழிபாட்டில் இதற்கு சிறப்பிடம் உண்டு.வீட்டில் யாருக்காவது அம்மை நோய் கண்டிருந்தால் வீட்டு வாசலில் வேப்ப இலையை சொருகி வைக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்த மரம் அதிகளவு பிரானவாயுவை வெளி விடுகின்றது. இந்த மரம் வீடு கட்டும் வேலைகளுக்கு கதவு,சன்னல்,உத்திரங்கள் போன்றவை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.