செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/துளசி


துளசிச் செடியை இந்துக்கள் புனிதமானதாக மதித்து வழிபடுகிறார்கள்.வீடுகளில் சிறிய மாடம் அமைத்து அதில் துளசிச் செடியை வைத்து வளர்க்கிறார்கள்.துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி சுற்றி வந்து வணங்குகிறார்கள்.துளசிச் செடிக்கு மருத்துவ குணம் உண்டு.இதன் இலைகள் தொண்டைக்கு இதம் அளிப்பதுடன் இருமல் , சளி முதலியவற்றில் இருந்து நிவாரணம் தருகின்றன.இதன் விதைகளயும் இலைகளையும் போட்டு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் தயாரித்து அருந்தலாம்.மகா விஷ்ணுவுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவருக்கு பூஜை செய்ய உகந்தது.ஆனால் பிள்ளையார் பூஜையில் இதனைப் பயன்படுத்துவதில்லை.

துளசி மாடத்தில் மஞள் செடியும் இருப்பதை கீழே உள்ள படத்தில் காணுங்கள்.