செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/கற்றாழை

இது குத்துச் செடி வகையைச் சேர்ந்தது.இதன் மெல்லிய மேல் தோலை உரித்தால் உள்ளே கண்ணாடி போன்ற சதைப் பகுதி காணப்படும்.இந்த ஜெல் போன்ற பகுதியை அப்படியே உண்ணலாம்.இதனை தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.உடல் சூட்டைப் போக்கி குளிர்ச்சி தரும்.இதனை "சோற்றுக் கற்றாழை " (சோறு போன்ற உள் பகுதியின் காரணமாக) என்றும் கூறுவதுண்டு.நார் உரிக்கப் பயன்படும் மற்றொரு கற்றாழையும் உண்டு. சோற்றுக் கற்றாழை, ஆங்கிலத்தில் "ஆலோ வோரா" என்று அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணத்தின் காரணமாக தற்போது இதனைப் பெரிய அளவில் பயிர் செய்கிறார்கள்.