சூது
திருக்குறள் > நட்பியல்
- 931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
- தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
- 932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
- நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
- 933. உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
- போஒய்ப் புறமே படும்.
- 934. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
- வறுமை தருவதொன்று இல்.
- 935. கவறும் கழகமும் கையும் தருக்கி
- இவறியார் இல்லாகி யார்.
- 936. அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
- முகடியான் மூடப்பட் டார்.
- 937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
- கழகத்துக் காலை புகின்.
- 938. பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
- அல்லல் உழப்பிக்கும் சூது.
- 939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
- அடையாவாம் ஆயங் கொளின்.
- 940. இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
- உழத்தொறுஉம் காதற்று உயிர்.