சுற்றம் தழால்
திருக்குறள் > அரசியல்
- 521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
- சுற்றத்தார் கண்ணே உள.
- 522. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
- ஆக்கம் பலவும் தரும்.
- 523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
- கோடின்றி நீர்நிறைந் தற்று.
- 524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
- பெற்றத்தால் பெற்ற பயன்.
- 525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
- சுற்றத்தால் சுற்றப் படும்.
- 526. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
- மருங்குடையார் மாநிலத்து இல்.
- 527. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
- அன்னநீ ரார்க்கே உள.
- 528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
- அதுநோக்கி வாழ்வார் பலர்.
- 529. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
- காரணம் இன்றி வரும்.
- 530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
- இழைத் திருந்து எண்ணிக் கொளல்.