சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
# நெப்டியூன்
== சூரியன் ==
சூரியக் குடும்பத்தின் தலைவன் சூரியன். இது ஒரு விண்மீன். சூரியன் தானாகவே ஒளிரக்கூடியது இது சூரியக் குடும்பத்தின் மையப்பகுதியில் உள்ளது.சூரியக் குடும்பத்தின் கோள்கல் எல்லாம் சூரியனைச் சுற்றியே வருகின்றன.பூமியின் நாம் பெறும் வெப்பம் மற்றும் ஒளிக்குக் காரணம் சூரியன் தான். சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.இது மிக மிகப் பெரிய வெப்பப் பந்து ஆகும் சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் மற்ற கோள்கள் எல்லம் ஒழுங்கான ஒரு அமைப்பில் சுற்றிவருகின்றன.
== புதன் ==
 
வரிசை 16:
 
 
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன் ஆகும். சூரியக் குடும்பத்தின் முதல் கோள். இது சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் 88 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது.சூரியனிடமிருந்து 5.79 கோடி கி. மீ. தொலைவில் உள்ளது.இது மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது. இதற்கு துணைக் கோள்கள் இல்லை.
 
== சுக்கிரன் ==
இதுவானில் விடியற்காலையில் தெரியும். சூரியனைச் சுற்றிவரும் இரண்டாவது கோள் ஆகும். இக்கோள் சுரியனை 225 நாள்களில் சுற்றி வருகிறது. சூரியனிடமிருந்து 10.82 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.இது கிழக்கில் இருந்து மேற்காக தன்னைத்தானே சுற்றுகிறது.இதற்குத் துணைக் கோள்கள் இல்லை.
இதுவானில் விடியற்காலையில் தெரியும்
[[File:VeLLi.jpg |right|thump|200px|சுக்கிரன் அல்லது வெள்ளி]] ‎
 
== பூமி ==
சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள் பூமியாகும். உரினங்கள் வாழும் கோள் பூமி ஒன்றுதான். இது திடமான கோள் ஆகும். பூமியைச் சுற்றி கற்று மண்டலம் உள்ளது, அதில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான உயிர்காற்று(ஆக்ஸிஜன்) உள்ளது. எனவே புவியில் மனிதர்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ முடிகிறது. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனிடமிருந்து 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனை ஒருமுறைச் சுற்றி வர 365.24 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.இதுவே நமக்கு ஒரு ஆண்டு ஆகும். பூமிக்கு ஒரு துணைக் கோள் உண்டு. அதன் பெயர் சந்திரன் ஆகும்.
 
[[File:Buumi.jpg |left|thump|200px|பூமி]] ‎
 
 
== செவ்வாய்==
[[File:Sevvaai.jpg ‎ |right|thump|200px|செவ்வாய்]]
செவ்வாய் சூரியக் குடும்பத்தின் நான்காவது கோள் ஆகும். ‎சிவப்பு நிறமுடைய கோள் எனவே செவ்வாய் எனப் பெயர் பெற்றது.இக்கோள் சூரியனைச் சுற்றி வர 687 நாள்கள் ஆகிறது. சூரியனிடமிருந்து 22.79 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.இது திடக் கோள் ஆகும். இது மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுகிறது.செவ்வாய் 2 துணைகோள்களைப் பெற்றிருக்கிறது.
 
 
வரி 35 ⟶ 36:
[[File:Viyaazan.jpg |left|thump|200px|புதன்]] ‎
 
வியாழன் சூரியக் குடும்பத்தின் ஐந்தாவது கோள் ஆகும். இது ஒரு வாயுக் கோள் ஆகும். இது சூரியனை 11ஆண்டுகள் 10 மாதங்களில் சுற்றி வருகிறது. சூரியனிடமிருந்து 77.83 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.இக்கோள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழலும். இது ஒரு பெரிய கோள் ஆகும் .இக்கோளுக்கு வாயுக்களால் ஆன வளையங்கள் உண்டு.வியாளனுக்கு 63 துணைக் கோள்கள் ஆகும்.
 
 
== சனி ==
 
[[File:SanikkOOL.jpg |right|thump|200px|புதன்]] ‎
 
சனி ஒரு வாயுக் கோள் ஆகும். இது சூரியக் குடும்பத்தின் ஆறாவது கோள் மற்றும் இரண்டாவது பெரிய கோள் ஆகும். இதனைச் சுற்றி அழகான வளையங்கள் இருக்கும். நுண்கற்களும் தூசும் பணியும் கொண்ட தொகுதி தான் வளையம் போலத் தோற்றம் அளிக்கிறது. சனிக் கோள் சூரியனை சுற்றி வர 29 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகிறது. இக்கோள் சூரியனிடமிருந்து 142.7 கி.மீ தொலைவில் உள்ளது. இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழன்று வருகிறது சனிக் கோளுக்கு 60 துணைக் கோள்கள் உள்ளன.
 
== யுரேனஸ் ==
 
[[File:Uranus(1).jpg |left|thump|200px|யுரேனஸ்]] ‎
யுரேனஸ் சூரியக் குடும்பத்தின் ஏழாவது கோள். இது ஒரு வாயுக் கோள் ஆகும்.இது சூரியனைச் சுற்றி வர் 84 ஆண்டுகள் ஆகிறது. சூரியனிடமிருந்து 287.1 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கித் தன்னை தானே சுற்றுகிறது .இக்கோளுக்கும் வாயுக்களால் ஆன வளையங்கள் உண்டு.இத்ற்கு துணைக் கோள்கள் 27 உள்ளன.
 
 
 
== நெப்டியூன் ==
நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது கோள் ஆகும் இது ஒரு வாயுக்கோள் ஆகும் இது சூரியனைச் சுற்றிவர் 164ஆண்டுக 9 மாதங்கள் ஆகிறது. இக்கோள் சூரியனிடமிருந்து 449. 7 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோளைச் சுற்றி வாயு வளையங்கள் உண்டு. இது தன்னைத்தானெ மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றிவருகிறது. நெப்டியூனுக்கு 13 துணைக் கோள்கள் உள்ளன.
[[File:Neptune (1).jpg |right|thump|200px| நெப்டியூன்]] ‎
 
== குறுங்கோள்கள் ==
புளூட்டொ. செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயெ என்பவை 2006 ஆம் ஆண்டிலிருந்து குறுங்கோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அளவில் மிகச் சிறியவை. இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன.செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே ப இலட்சக்கணக்கான குறுங்கோள்கள் உள்ளன. சிறுசிறு கற்கள்,பெரும்பாறைகள் முதல் 300-400 கி. மீ விட்டம் உடைய பெரும் வான்பொருள்கள் ஆகியவையே இந்தக் குறுங்கோள்கள் ஆகும். இந்திய வானவியல் அறிஞர் வைணுபாப்பு, அணுசக்தித் துறையின் தந்தை சாராபாய், கணித மேதை இராமானுஜம் ஆகியோரின் பெயரிலும் குறுங்கோள்கள் உள்ளன.
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது