விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==முதற்பக்க சீரமைப்பு==
என்னால் இதனை நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது. விக்கிநூல்களின் ஆங்கில பதிப்பு முதற்பக்கம் எந்தவித ஆற்பரிப்பும் இல்லாமல் மிக எளிமையாக அமைந்து உள்ளது. ஆனால் தமிழ் விக்கிநூல்களின் பதிப்பில் முதற் பக்கம் மின்னும் வகையில் செய்யப் பட்டு உள்ளது. ஆனால் விக்கிநூல்கள் தமிழ் பதிப்பில் எந்த ஒரு நூல்களும் முழுமையாகக் கூட செய்யப் பட வில்லை. நான் விக்கி சமுதாயத்திடம் கேட்பது ஒன்றுதான். முதற்பக்க மினுமினுப்பா அல்லது விக்கி நூல்கள் தளத்தின் தரமா? ஆகவே முதற்பக்கம் எப்படி மின்னுகிறது என்பதை விட விக்கி நூலகள் தளத்தினுள் செல்ல சிறந்த தொடுப்புகளை அங்கு வைக்காலம் என எண்ணுகிறேன். ஆகவே நான் சொல்ல விளைவது விக்கி அன்பர்கள் முதற்பக்க வடிவமைப்பு மிக எளிமையாக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் உள்ளே உள்ள புத்தகங்களுக்கு உரிய தொடுப்புகள் அங்கு இருக்க வேண்டும்.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 13:02, 10 செப்டெம்பர் 2011 (UTC)
 
==தமிழ் நண்பர்கள் நூல்களை ஆரம்பிக்கலாம்==
ஏதாவது நூல்களை ஆரம்பிக்கலாம். ஒரு வேளை அதிக கட்டுரைகளை உருவாக்க முடியாத நபர்கள், ஒரு குறிபிட்ட நூலில் எந்த வகையான தலைப்புக்கள் இருக்கலாம் என்பதையாவது எழுதினால். பின்னொரு பொழுதில் வருங்கால விக்கி அன்பர்கள் அவர்களுக்கு பிடித்தமான தலைப்பு அங்கு இருக்குமேயானால் அதனை அவர்கள் தொகுத்து முழுமையடையச் செய்ய முடியும் என நம்புகிறேன். எனவே ஒரு விக்கி அன்பர் ஒரு நூலை எடுத்துக் கொண்டால் அந்த நூல் முழுவதுமே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரால் ஒரு குறிபிட்ட நூலில் உள்ள தலைப்புகளையாவது பட்டியலிட முடியும் என்றால் அதுவே போதுமானது என எண்ணுகிறேன்.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 13:02, 10 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது