விக்கிநூல்கள்:மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
சி cleaned up
வரிசை 16:
 
== தொகுத்தல் பயிற்சி செய்யுமிடம் ==
'''திக்குவல்லை ஸப்வானின்
ஒரே இரத்தம் (மொழி பெயர்ப்பு) சிறுகதைத் தொகுப்பு '''
--[[பயனர்:Kalaimahan Fairooz|Kalaimahan Fairooz]] 17:00, 18 ஜூலை 2009 (UTC) கொழும்பு 6 மீரா பதிப்பகத்தாரின் 73 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. "ஒரே இரத்தம்' மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு. ஏலவே தனக்கே உரித்தான பாணியில், தென்பகுதி மண் வாசனை கமழ, நல்ல தமிழில் "உம்மாவுக்கொரு சேலை' யைத் தந்த பிரபல சிறுகதையாசிரியர் திக்குவல்லை ஸப்வான்தான் இந்த மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தவர். இது மொழிபெயர்ப்பாசிரியரின் முதல் மொழிபெயர்ப்பு நூல், அவரால் தினகரன் வாரமஞ்சரி, மல்லிகை இதழ்களில் எழுதப்பட்ட சிறுகதைகளில் இருபது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் "ஒரே இரத்தம்' என்ற மகுடந்தாங்கி வெளிவந்துள்ளது.
 
மொழிபெயர்ப்பாளன் தன் தாய்மொழியில் முதலில் நன்கு தேர்ச்சிமிக்கவனாக இருக்க வேண்டும், மூலமொழியிலும் பாண்டித்தியம் தேவை. அவன் இடமறிந்து நடைதெரிந்து வலம்வர வேண்டும். இல்லாதுவிடின் சிற்சில இடங்களில் வேடிக்கைகள் நிகழ இடமுண்டு. எவ்வளவுதான் பேச்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றிடினும், எழுத்துமொழிப் பாண்டித்தியத்திற்கு ஒப்பாகாது.
 
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்,' என்ற வள்ளுவன் கூறும் "இவன்' தகைமை திக்குவல்லை ஸப்வானுக்குப் பொருந்தும். மேற்சொன்னவை முகத்துதி என்றெண்ணலாகாது. இரு மொழிப் பாண்டித்தியம் மிக்க மொழிபெயர்ப்பாளனின் மொழி பெயர்ப்பு காலத்தில் நிலைக்கும் என்பதற்கான சான்றாதாரம்.
 
யஸவர்த்தன ருத்ரிகு, ஜயசிங்க, கோரளகம, தெனகம சிரிவர்த்தன, தர்ஸனா தம்மி விஜேதிலக்க, எரெவ்வல நந்திமித்ர, விமலதாச சமரசிங்க,பந்துநாத் தஸநாயக்க ஹேமரத்ன, லியனாராச்சி, குணசேன விதான, நிஸ்ஸாங்க ரணவக்க, நந்தசேன ஹேரத், சிட்னி மார்க்கஸ் டயஸ், பியசிரி கொடித்துவக்கு, உபாலி வணிகசூரிய ஆகிய பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களையே இவர் தமிழில் மீள்மொழிந்துள்ளார்.
 
சின்னச் சின்ன வாக்கியங்களில் சோர்வேற்படாத வசனங்களைக் கொண்டு மீள்மொழியாசிரியர் கதையை அழகெழத் தந்துள்ளார். சிருஷ்டிகர்த்தாவொருவன் தான் சிருஷ்டிக்கும் ஆக்கத்தின் கண், இடமறிந்து சில நவீன சொற்களைப் பிரயோகிக்கலாம். அது அவன் சார்ந்த இடத்தின் தேவையுமாகின்றது. மக்களுக்கானதே இலக்கியமேயன்றி, இலக்கியத்துக்கு மக்களல்ல. திக்குவல்லை ஸப்வானும் மொழி பெயர்க்கும் போது, சில சொற் பிரயோகங்கள் வந்து போகின்றன. உதாரணமாக முட்டுறாணுவள், உருப்படுவானுவள், கண்களைத் திறப்பானுவள், கழுத்தறுக்கிறானுவள் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள், இவ்வார்த்தைகள் பொருத்தமற்றன என்று கூறவியலாது; "னுவள்' என்ற சொல்லிறுதிகள் முஸ்லிம் பாத்திரங்களுக்கு மட்டுமேயுரித்தானது என்று தள்ளவியலாது. அவ்வாறு தள்ளுவதாயின் நாட்டார் பாடல்களை நாம் படிக்கவே இயலாது.
 
மானுடம் இன்று சாதி, குல,மத வேறுபாடுகளால் அழிந்தொழிந்து ஐயறிவு ஜீவன்களுக்கு ஊனாக அமையும் காலை, பிறமொழி பேசுவோனின் சமய, கலாசார, மத அநுட்டானங்கள், மனப்பதிவுகள், உள்ளக் கிடக்கைகள் முதலானவற்றை ஒருவன் அறிந்துகொள்வதனால் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள "அவன் அந்த ஜாதி' என்ற முத்திரைக்கு சாவுமணியடிக்கலாம். இந்தக் கைங்கரியத்தை திக்குவல்லை ஸப்வான் திறம்படச் செய்துள்ளார். இச் சிறுகதைகளை நோக்குங்கால், சிங்களமொழி மூலக் கதாசிரியர்களின் உணர்வுகளை, அவர்கள் உள்ளத்தின் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் பற்றிய மனக்கிடக்கைகளை வாசகர்கள் நன்குணர்ந்து கொள்ளலாம்.
 
மொழிபெயர்க்கப்பட்டுள்ள எல்லாக் கதைகளிலும் சிங்களப்பாத்திரங்கள் வராத இடங்களில் கதை சொல்லி இருக்கும் பாங்கை நோக்கும்போது, தமிழ்ச் சிறுகதைகளாகவே அக்கதைகள் இருக்கின்றன. அக்கதைகள் ஒவ்வொன்றும் புதுச் சிருட்டிகளாக உருப்பெற்றிருக்கின்றன. தமிழ் கூறும் நல்லுலகு திக்குவல்லை ஸப்வானின் இந்த வருகையை போற்றாமலிருக்க முடியாது.
 
கதைக்கருக்கள் சிங்களவர்களின் அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதார ரீதியிலானவை. சில சிங்களக் கதைகளில் சிங்களவர்களின் மேலாதிக்க மனப்பான்மை நன்கு நிமிர்ந்து நிற்கின்றன. சிங்களவர்கள் சிறுபான்மையினர் பற்றித் தம்முள் கொண்டுள்ள மனோபாவம் நன்கு வெளிப்பட்டுள்ளன. கணிசமான கதைகள் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கதைகள், இதற்குக் காரணம் இக்கதைகள் மனித உறவுகள், நட்பு பற்றியே பேசுகின்றன. சிங்களவர்களுக்குள் பெரும்பாலும் சிறுபான்மைச் சமூகம் வெறும் கருவேப்பிலைகள், பகடைக்காய்கள் என்பதும் இக்கதைகளினூடாக அறியக்கிடக்கின்றன.
 
சிங்களத்தில் கையாளப்படும் மரபுத்தொடர்கள், உவமைகள் போன்றன தமிழுக்குள் வந்து இரண்டறக் கலந்துள்ளன. இனி வாசகர்களுக்குள்ளும் அந்தச் சொற்பிரயோகங்கள் நின்று நிலைக்கும் என எண்ணுகிறேன். காலப்போக்கில் தமிழில் கடந்த கிளைமொழிச் சொற்கள் போல இவற்றின் பாவனையும் வரும். தென் பகுதி மண் வாசனைச் சொற்கள் திக்குவல்லை ஸப்வானுக்கு அத்துப்படி. தென் பகுதியிலேயே வாழ்பவர் இவர். மூலக்கதையாசிரியர்களில் பலரும் தென்பகுதியைச் சார்ந்தவர்கள்.
 
ஆயினும் இந்நூலில் அதிகம் கிளைமொழிச் சொற்களைக் கையாளாதிருப்பதில் ஆத்ம திருப்தி. ஆயினும் ஓரிரு இடங்களில் "அவருக்குச் சொந்தமான' சொற்கள் வந்து போகின்றன.
 
தமிழ் பேசுவோரில் பலருக்கு சிங்கள எழுத்தின் பால் பரிச்சயமில்லை என்கிறேன். சிங்கள தமிழ் இருமொழிப் பாண்டித்தியம் மிக்கவர்கள் இவ்வாறான கைங்கரியத்தை செய்யும் போது தமிழ் பேசும் மக்கள் மென்மேலும் இவ்வாறான தேடல்களின்பால் செல்லவும், தேசிய இனப்புரிந்துணர்வுக்குப் பாலமமைக்கவும் முடியுமாகின்றது. இதேபோல சிறுபான்மையினரின் அன்றாட அவலங்கள், மனக்கிலேசங்கள், அவர்களுக்குள்ளும் இருக்கும் மனிதம் முதலாம் விடயங்கள் பற்றிச் சிங்களவர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டுத் தமிழிலுள்ள சீரிய "கருத்துக்கள்' பொதிந்த சிறுகதைகளை மட்டுமல்ல, கட்டுரைகளையும் சிங்களத்தில் கொடுக்க திக்குவல்லை ஸப்வான் போன்றவர்கள் முயற்சியெடுக்க வேண்டும். மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறுகதைகளை நோக்குங்கால், யஸவர்த்தன ருத்ரிகுவின் "ஒரே இரத்தம்', தெனகம சிரிவர்த்தனவின் "டோஸன்...', எரெவ்வல நந்திமித்ரவின் "ஓர் எழுத்தாளனின் கடைசிப் படைப்பு' நல்ல கதைகளாகி நிற்கின்றன. யஸவர்தன ருத்ரிகுவின் ஒரே இரத்தம் சிறுகதையில், விக்னேஸ்வரன், அருந்ததி எனும் சிங்கள மாணவிக்கு ஆங்கிலம் கற்பித்துக்கொடுக்கின்றான். கடமையில் கண்ணுங் கருத்துமான விக்னேஸ்வரன் காலதேவனின் நகர்த்தலில் அருந்ததியைக் காதலிக்கின்றான். இது சங்ககால அகத்தினைக் காதல் போல வந்துபோகின்றது. இருவரும் யாருமறியாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். மகளின் தந்திகண்டு பெற்றோர் திக் பிரமை பிடித்து நிற்கின்றனர்.
 
அருந்ததி தாய்மைப் பேறு அடையுங் காலை, தன் பெற்றோருக்கு கடிதம் அனுப்புகிறாள். அருந்ததியின் தந்தை சோமதாஸ வெகுண்டெழுகின்றார். மனைவி சாந்தப்படுத்துகின்றார் ஆயினும், சோமதாஸ,
 
"பொத்துங்க வாய..... அவள்ட வயித்துல இருக்கிறது குட்டித்தமிழன்... இல்லாட்டா தமிழச்சி, அதனோட ஒடம்பில ஓடுறது தமிழ் ரெத்தம், தமிழனா பொறக்கப் போகுதே அதுதான் தப்பு...' எனச்சாடுகின்றார். ஈற்றில் தனது உயிரைக் காப்பாற்றியது ஒரு தமிழனின் இரத்தம் என்பதை உணர்ந்த சோமதாஸ மனம் மாறுகின்றõர். இவ்வாறு சிங்களவர் மனதில் புரையோடிப் போயுள்ள சில சிறுபிள்ளைத்தன உணர்வுகள் இக் கதையில் இழையோடுகின்றன. ஆயினும், இக்கதை மூலம் சிங்கள, தமிழர், உறவினைக் கட்டியெழுப்ப மூலக் கதையாசிரியர் முயன்றிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளது.
 
தெனகம சிரிவர்த்தனவின் "டோஸன்' சிறுகதையில் டோஸன் என்ற நாயின் கதாபாத்திரத்தினூடாக மனிதர்களின் போலித்தன்மைகள், அரசியலில் காணும் திருகு தாளங்கள், சுய இலாபத்துக்காக செய்யப்படும் சின்னத்தனங்கள் நையாண்டியுடன் சொல்லப்பட்டுள்ள பாங்கு வாசகர்களுக்குச் சுவையூட்டுவன.
 
"ஓர் எழுத்தாளனின் கடைசிப் படைப்பு...! எனும் சிறுகதையைத் தந்துள்ள எரெவ்வல நந்திமித்ர தன்னெழுத்துக்களில், ஒரு எழுத்தாளன் பற்றி வீட்டினரின், சமுதாயத்தின் மன விம்பம், போலியாக இலக்கியவானில் வலம்வரும் அறிவில்லாதவர்கள், இலக்கியமே என்னவென்றறியாத ஊடகவியலாளர்களையெல்லாம் சாடியுள்ளார். இந் நூலுக்கு அணிந்துரையை சிங்கள மொழித்துறையில் தேர்ச்சி மிக்க, சட்டத்தரணி இரா. சடகோபன் அவர்களும், கருத்துரையை (நனிந்துரை) மொழிபெயர்ப்பாளர் காலஞ்சென்ற எம்.வை. ஸப்ருல்லாகானும் எழுதியுள்ளனர். அறபா தேசியப் பாடசாலை அதிபர் வாரிஸ் அலி மௌலானா திக்குவல்லை ஸப்வான் பற்றி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
மிலேனியம் கல்வி ஸ்தாபனத் தலைவர், புரவலர் எஸ். ஹுஸைன் மௌலானா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலின் முகப்பட்டையே வெகு அசத்தல், சிங்களச் சாயல் அதில் பிரதிபலிக்கின்றது. இந்நூலைப் பதிப்பித்த மீரா பதிப்பகத்தினர் மிகப் பாராட்டப்படவேண்டியவர்கள். மொழிபெயர்ப்பாசிரியரிடமிருந்தும், பதிப்பகத்திடமிருந்தும் இவ்வாறான சிறந்த நூல்களை மேலும் எதிர்பார்க்கலாம்.
நூல் விமர்சனம் : மதுராப்புர கலைமகன் பைரூஸ்
வெளியான பத்திரிகை : வீரகேசரி (கலைக்கேசரி)
திகதி : 21.06.2008
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது