குழந்தைப் பாடல்கள்/வண்ணத்துப் பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"<poem> வண்ணத்துப் பூச்சி வண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

19:39, 27 சூன் 2017 இல் கடைசித் திருத்தம்

 
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி
பறக்குது பார் பறக்குது பார்
அழகான செட்டை அழகான செட்டை
அடிக்குது பார் அடிக்குது பார்
 
சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை
பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார்
தொட்டது முடனே தொட்டது முடனே
பட்டது பார் பட்டது பார்
 
பூக்களின் மேலே பூக்களின் மேலே
பறந்து போய் பறந்து போய்
தேனதை உண்டு தேனதை உண்டு
களிக்குது பார் களிக்குது பார்
 

எழுதியவர்: -வித்துவான் க. வேந்தனார்