இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 264:
 
வருத்திற்கு வருடம் மாறுகின்ற மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ஒரு குறிப்பிட்டத் தொகையை நிர்வாக அலுவலர்கள் செலவழிக்கின்றனர் .ஆனால் அதற்கான செலவுத் தொகை அவர்களுக்கு முன் கூட்டியே வழங்கப்படுவது இல்லை . அவ்வாறு வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை .இதற்கு நமது அரசாங்கம் கூறாமல் கூறும் பதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருமானம் அதிகமாம் . இது இலஞ்சம் வாங்கி மக்களிடம் கெட்ட பெயரை வாங்கி உங்கள் பணியை மேற்கொள்ளுங்கள் என்று ஊக்குவிப்பது போல் அல்லவா உள்ளது . மேலே கண்ட ப்ல்வேறுபல்வேறு வகைப்பட்ட பணிகளின் காரணமாகவும் ,தங்கள் பணிகளைச் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்காமல் இருப்பதாலும் , ஒரு வேலையை செய்து முடிப்பதற்கு முன்னதாகவே வேறொரு பணிகள் கொடுக்கப்படுவதாலும் கிராம நிர்வாக அலுவலர்களால் எந்த வேலையையும் முழுமையாகவும் , தெளிவாகவும் செய்து முடிக்க இயலாத சூழல் இன்று நிலவி வருகிறது .
*
நாங்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து கொடுப்பது மட்டுமே கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை .அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று எங்களுக்குத் தெரியாது ,அதனைப் பற்றிய கவலையும் எங்களுக்கு இல்லை , கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் குறைகளை அரசாங்கத்திடம் கூறி தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உயர் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர் . ஒரு வட்டார அளவில் செயல்படும் , மாவட்ட அளவில் செயல்படும் திறமையான அலுவலர்களை விட கிராமங்களில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் திறமையான நிர்வாகத்தினால் மட்டுமே அந்த கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற முடியும் . ஒரு மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது அந்த கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கே அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது .