இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 279:
=== கிராம கணக்குகளை கணிணி மயமாக்குதல் ===
கிராம கணக்குகளை புதுப்பித்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதாலும் , ஒரு கிரமா நிர்வாக அலுவலர் பல கிராமங்கலுக்கு பொறுப்பு வகித்ததாலும் , அவை மிக மோசமன நிலையிலும் , குழறுபடிகள் நிறைந்தும் காணப்படுகின்றன .அவற்றை முறையாகப் புதுப்பித்து கணிணி மயமாக்குதல் அவசியமாகிறது ,”அ” பதிவேடு , FMP , திருத்தப்பட்ட தூய கிராம சிட்டா , வருடத்திற்கு வருடம் மாறுகின்ற 7 மற்றும் 10 ல் பிரிவு 2 , அடங்கல் , கணக்கு எண் 13 ,14 போன்ற அனைத்து கிராம கணக்குகளும் கணிணி மயமாக்கப்பட வேண்டும் .மேலும் நில வரி மற்றும் இதர வரிகளை இணைய வழியாக செலுத்தி இரசீது பெறும் திட்டம் அறிமுகம் செயப்பட வேண்டும் . நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகின்ற இந்த சூழலில் மக்களின் மிகப்பெரிய சொத்து அவர்களின் நில உடைமைகள்தான் . எனவே இந்த மாறுதல்களையும்,திருத்தங்களையும் ஒரே நாளில் செய்து விட முடியாது .கிரமங்களின் பரப்பளவு ,மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பல மாதங்கள் ,ஒரு சில வருடங்கள் கூட ஆகலாம் .அதனை பரிசீலனை செய்து அதற்கு சரியான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் .
*
மனுதாரர்கள் ஒவ்வொரு சான்றுகளுக்காகவும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ,வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ,வட்டாச்சியர் அலுவலகம் , என அலைவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சான்றிதழ்களும் இணைய வழியாக வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன்படி தற்போது ஒரு சில மாவட்டங்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது .இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கணிணி மையம் என்ற தனியார் அமைப்பிற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் இந்த மக்கள் கணிணி மையத்திற்கு சென்று பல்வேறு சான்றுகள் வேண்டி இணைய வழியாக விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட நாளுக்கு பிறகு சான்றிதழ்களை மக்கள் கணிணி மையம் வழியாகவே பெற்றுக்கொள்ள முடியும் .
*
ஆனால் இந்த சேவையில் ஒரு சில குறைபாடுகளையும் காண முடிகிறது .பொதுமக்கள் மக்கள் கணிணி மையம் வழியாக பல்வேறு சான்றுகள் வேண்டி விண்ணப்பம் செய்து கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் ,வட்டாச்சியர் என யாரையும் சந்திக்காமலே சான்றிதழ் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது .பொதுமக்கள் விண்ணப்பம் செய்வதோடு தனது வேலை முடிந்தது என்றென்னி கிராம நிர்வாக அலுவலரின் , வருவாய் ஆய்வாளரின் , வட்டாச்சியரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தனது வேலையை பார்க்க சென்று விடுகின்றனர் .
*
*
குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதாலும் , உயர் அலுவலர்கள் நெருக்கடி கொடுப்பதாலும் , விசாரணை மேற்கொள்ளாமல் சான்றிதழ் வழங்கும் சூழல் உருவாகியிருக்கிறது . மக்கள் கணிணி மையம் தனியார் அமைப்பாக இருப்பதாலும் , தகவல் தொழில் நுட்பங்கள் பெருகி வருவதாலும் , எந்த ஒரு தகவலையும் தவறாக காட்டும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது . தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் அவற்றிற்கு இல்லை . கிராம நிர்வாக அலுவலரைக் கூடச் சந்திக்காமல் சான்றிதழ் பெறுவது பல தவறுகளுக்கு வழி வகுக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும் .
எனவே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இவ்வசதிகளை வழங்குவதே சரியானதாக இருக்க முடியும் . மேலும் ஒவ்வொரு சான்றுகளுக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுது . கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு இவ்வசதிகளை வழங்குகின்ற போது பெயரளவில் உள்ள வருவாய்த் துறையினால் அரசின் வருவாயும் அதிகரிக்கும் .
 
=== கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் விரிவாக்கம் ===