இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 265:
நாங்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து கொடுப்பது மட்டுமே கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை .அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று எங்களுக்குத் தெரியாது ,அதனைப் பற்றிய கவலையும் எங்களுக்கு இல்லை , கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் குறைகளை அரசாங்கத்திடம் கூறி தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உயர் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர் . ஒரு வட்டார அளவில் செயல்படும் , மாவட்ட அளவில் செயல்படும் திறமையான அலுவலர்களை விட கிராமங்களில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் திறமையான நிர்வாகத்தினால் மட்டுமே அந்த கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற முடியும் . ஒரு மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது அந்த கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கே அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது .
*
அரசாங்கத்தின் ஒரு சில நடவடிக்கைகள் மூலம் இன்றைய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் . நமது அரசாங்கம் கிராம நிர்வாக அலுவலர்களின் எதிர்கால முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு என்று தனித் தேர்வினை நடத்தி பணியில் அமர்த்தி வருகிறது . இருந்த போதிலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிக பட்சம் பதவி உயர்வு இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது . கிராம நிர்வாகம் பற்றி அறிந்திராத இளநிலை உதவியாளர்களுக்கு கூட வருவாய் துறையில் உயர் பதவிகள் வழங்கப்படுகிறது . ஆனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை .
 
=== கிராம கணக்குகளை கணிணி மயமாக்குதல் ===