இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 257:
 
=== இன்றைய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர் கொள்கிற பிரச்சனைகள் ===
பல கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டமைப்பு என்பது சிறப்பாக இல்லை அதன் சுவர் , கதவு ஜன்னல் என அனைத்திலும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது . கழிப்பிட வசதி , மின் வசதி , குடியிருப்பு வசதி இல்லாமல் பாழடைந்து பராமரிக்கப்படாமல் உள்ளது .எனவே இது போனற கிரமங்களில் உள்ள கிராம கணக்குகளைப் பராமரிப்பதில் அந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிரமம் ஏற்ப்பட்டுள்ளது . எனவே அரசாங்கம் இதனை கவனத்தில் கொண்டு இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுப்பது அவசியமகிறது .
*
கிராம கணக்குகளை புதுப்பித்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதாலும் ஒரு கிரம நிர்வாக அலுவலரின் பொறுப்பில் இரண்டு,மூன்று கிராமங்கள் இருந்ததாலும் கிராம கணக்குகள் மோசமான நிலையிலும் , முறையகப் பராமரிக்கப் படாமலும் மேலும் சர்வே அடையாளங்கள் பகுதி அளவுக்கு மேல் மக்களால் அழிக்கப்பட்டு விட்டன . எனவே
[[ Resurvay ]] பணி மேற்கொண்டு கிராம கணக்குகளை மறு கட்டமைப்பு செய்வதும் அவசியமாகிறது . கிராம நிர்வாக அலுவலர்கள் களப்பணி மேற்கொள்பவர்கள் அலுவலகத்தில் அம்ர்ந்த படியே வேலை பார்க்க முடியாது .பணியின் காரன்ணமாக எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இருந்து நாற்பது ,ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் சில நேர்வுகளில் கோட்டாச்சியர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் மாதத்தில் பல நாட்கள் சென்று வருகின்றனர் . ஆனால் இவர்களுக்கான பயணப்படிகள் மிகவும் குறைவக வழங்கப்படுகிறது .
*
வருத்திற்கு வருடம் மாறுகின்ற மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ஒரு குறிப்பிட்டத் தொகையை நிர்வாக அலுவலர்கள் செலவழிக்கின்றனர் .ஆனால் அதற்கான செலவுத் தொகை அவர்களுக்கு முன் கூட்டியே வழங்கப்படுவது இல்லை . அவ்வாறு வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை . மேலே கண்ட ப்ல்வேறு வகைப்பட்ட ப்ணிகளின் காரணமாகவும் ,தங்கள் பணிகளைச் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்காமல் இருப்பதாலும் , ஒரு வேலையை செய்து முடிப்பதற்கு முன்னதாகவே வேறொரு பணிகள் கொடுக்கப்படுவதாலும் கிராம நிர்வாக அலுவலர்களால் எந்த வேலையையும் முழுமையாகவும் , தெளிவாகவும் செய்து முடிக்க இயலாத சூழல் இன்று நிலவி வருகிறது .
 
=== கிராம கணக்குகளை கணிணி மயமாக்குதல் ===