இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 237:
*
தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட [[ கிராமத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ]] ,பொது சுகாதாரம் பராமரிப்பு , பொதுச் சொத்துகள் பராமரிப்பு , [[ தேர்தல் பணிகள் ]] மேற்கொள்வது , கனிம வளங்களைப் பாதுகாப்பது , இயற்கை வளங்களைப் பாதுகாப்பது [[ இயற்கை இடர்பாடு]]களின் போது விரைந்து செயல்பட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவது & அரசின் மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க களப்பணி மேற்கொள்வது போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் , கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . பிறப்பு & இறப்பு சான்றுகள் , அடையாளச் சான்று , [[ அனுபோகச் சான்று ]] , [[ அடங்கல் சான்று ]] , [[ நில உரிமைச் சான்றுகள் ]] வழங்குவது . வருமானச் சான்று சாதிச் சான்று , வாரிசுச் சான்று , இருப்பிட சான்று ,, சொத்து மதிப்புச் சான்று , ஆதரவற்ற குழந்தைச் சான்று , ஆதரவற்ற விதவைச் சான்று , கலப்புத் திருமணச் சான்று , கணவனால் கைவிடப்பட்டவர் சான்று , போன்ற பல்வேறு சான்றுகள் வழங்க பரிந்துரை செய்வது , [[ நில உடமை]]களை பராமரித்தல் , மரம் & நில வரிகளை வசூல் செய்தல் , மற்றும் இதர பாக்கிகளை வசூல் செய்தல் , மேலும் ஒவ்வொரு மாதமும் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு , [[ அடங்கல் ]] எழுதி , அது தொடர்பான கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் [[ பட்டா மாற்ற ]] விண்ணப்பங்களைப் பெறுவது , [[ உட்பிரிவு மாற்றங்கள் ]] கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது , [[ சிறு விவசாயி சான்று ]] கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது , மேலும் அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது . சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரிய விண்ணப்பங்களைப் பெற்று , அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது .
*
கிராம மக்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்குத் துவங்குவது , கூட்டுறவு & மற்ற வங்கிகளில் கடன் பெறுவது , வீடுகள் , கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு [[ மின் இணைப்பு ]] பெறுவது , என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை என்பது அவசியமானதாக கருதப்பட்டு வருகிறது . மேலும் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டாலோ , பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கருதினாலோ உடனடியாக காவல் துறையை அழைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் , கிராமத்தில் சுற்றுப் புறங்களை தூய்மையாக வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளவும் , சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளரை அழைத்து பேசி சுகாதார தூய்மை நடவடிக்கை மேற்கொள்ளவும் , கிராம மக்களில் பலருக்கு நோய் பரவி இருந்தாலோ , நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக கருதினாலோ மருத்துவ அலுவலரை அழைத்து பேசி அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளவும் , உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் கிராம நிர்வாக அலுவலர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர் .