மாங்கோடிபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
மாங்கோடிபி(MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.
 
== பொருளடக்கம் ==
* [[/மாங்கோடிபி என்றால் என்ன?/]]
* [[/நிறுவுதல்/]]
* [[/மாங்கோடிபியைச் செயல்படுத்துதல்/]]
* [[/மாங்கோடிபியைப் பயன்படுத்த தொடங்குதல்/]]
* [[/மாங்கோடிபி கட்டளைகள்/]]
 
==மாங்கோடிபி என்றால் என்ன ?==
மாங்கோடிபி என்பது ஒரு திறமூல தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத வினவு மொழி வகையை சார்ந்தது. இது உயர் செயல்திறன்(High Performance), தடைகளின்றி கிடைத்தல்(High Availability) மற்றும் தானியங்கி முறையில்(Automatic Scalability) விரித்து இயங்கும் தன்மைகளை கொண்டது.
===கட்டமைப்புள்ள வினவு மொழிக்கும் மாங்கோடிபிக்கும் உள்ள சொல்லியல் தொடர்புகள்===
{| class="wikitable" style="margin: 1em auto 1em auto;"
|+ '''கட்டமைப்புள்ள வினவு மொழி vs மாங்கோடிபி'''
! scope="col" | கட்டமைப்புள்ள வினவு மொழி(SQL Terms/Concepts)
! scope="col" | மாங்கோடிபி (MongoDb Terms/Concepts)
|-
| தரவுத்தளம் (Database) || தரவுத்தளம் (Database)
|-
| அட்டவணை (table) || தொகுப்பு (Collection)
|-
| கிடைவரிசை (row) || ஆவணம் (Document)
|-
| நிரல் (column) || புலன் (field)
|}
 
===ஆவணத் தரவுத்தளம்===
இது ஒரு ஆவணத் தரவுத்தளம் ஆகும். இதன் தரவுக் கட்டமைப்பு புலம் மற்றும் அதன் மதிப்பையும் கொண்ட இணைகளாக இருக்கும். மாங்கோடிபி ஆவணங்கள் ஜசோன்(JSON) பொருட்களை ஒத்து இருக்கும். புலத்தில் இருக்கும் மதிப்புகள் ஒரு ஆவணமாகவோ, அல்லது வரிசைகலாகவோ அல்லது ஆவனங்களின் வரிசையாகவோ இருக்கலாம்.
 
===ஆவணத் தரவுத்தளம் எடுத்துக்காட்டு===
<source lang="javascript">
{
name:"சிவா",
age:27,
Status:"A",
groups: ["news","sports","tech"]
}
</source>
 
==நிறுவுதல்==
===விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவுதல்===
# முதலில் [http://www.mongodb.org/downloads மாங்கோடிபி பதிவிறக்க பக்கத்திலிருந்து] தேவையான இயங்குதளத்திற்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
# எந்த பதிப்பை பதிவைரக்கவேண்டும் என்பதை அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை கொடுக்க வேண்டும்: <code>wmic os get osarchitecture</code>
# பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பினை பிரித்தெடுத்து "c:\mongodb" என்ற அடைவுக்கு மாற்றவும்
# நீங்கள் உங்கள் மாங்கோடிபி மென்பொருளை செயல்படுத்துவதற்கு தயாராகிவிட்டீர்கள்
 
==மாங்கோடிபி செயல்படுத்துதல்==
===மாங்கோடிபிற்க்கான தரவு அடைவை அமைத்தல்===
மாங்கோடிபி அதன் கோப்புகளை சேமிக்க ஒரு தரவு கோப்புறை அல்லது அடைவு தேவைப்படுகிறது.மாங்கோடிபியின் இயல்பிருப்பு அடைவு c:\data\db ஆகும். இதனை உருவாக்க பின் c:\ அடைவிற்கு சென்று பின்வரும் வழிகளை பின்பற்றவும்:
<source lang="dos">
md data
md data\db
</source>
 
Mongod.exe -dbpath விருப்பத்தை பயன்படுத்தி தரவு கோப்புகளை வேறொரு மாற்று பாதையில் இருக்குமாறு குறிப்பிட முடியும். எடுத்துக்காட்டாக:
<source lang="dos">
C:\mongodb\bin\mongod.exe --dbpath d:\test\mongodb\data
</source>
 
===மாங்கோடிபியை தொடங்குதல்===
[[படிமம்:Mongod.png|align=right|thumb|alt=மாங்கோடிபி தொடங்குதல்|மாங்கோடிபி தொடங்குதல்]]
மாங்கோடிபியை தொடங்குவதற்கு கட்டளை துண்டியிலிருந்து பின்வரும் கட்டளையை செயல்படுத்தவும்:
<source lang="dos">
C:\mongodb\bin\mongod.exe
</source>
இது முக்கிய மாங்கோடிபி தரவுத்தள செயல்முறையை ஆரம்பிக்கும். "waiting for connections" என்ற பணியக வெளியீடு(console output) mongod.exe செயல்முறை வெற்றிகரமாக இயங்குகிறது என்பதை குறிக்கிறது.
 
==மாங்கோடிபி பயன்படுத்த தொடங்குதல்==
===மாங்கோடிபியுடன் இணைக்க===
[[படிமம்:Mongoconnect.png|align=right|thumb|alt=மாங்கோடிபி ஷெல்|மாங்கோடிபி ஷெல்]]
மாங்கோடிபியுடன் இணைக்க mongo.exe என்ற கட்டளையை பயன்படுத்த வேண்டும். மாங்கோடிபியை இணைப்பதற்கு தொடங்குவதற்கு கட்டளை துண்டியிலிருந்து பின்வரும் கட்டளையை செயல்படுத்தவும்:
<source lang="dos">
C:\mongodb\bin\mongo.exe
</source>
இதனை செயல்படுத்தும் பொழுது இயல்பாக நுழைவாயில் என் 27017ல் mongod.exe யுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிடும். அது பின்வரும் படத்தில் உள்ளது போல ஒரு ஷெல்லை காண்பிக்கும்.
 
===தரவுத்தளத்தை தேர்வு செய்தல்===
மாங்கோ ஷெல் தொடங்கியவுடன் டெஸ்ட் தரவுத்தளம் தேர்வு செய்யப்பட்டு விடும். தற்போது தெரிவு செய்யப்பட்ட தரவுத்தளத்தை பார்க்க பின்வரும் கட்டளையை இடவும்:
<source lang="mysql">
db
</source>
 
===தொகுப்பு உருவாக்குதல் மற்றும் ஆவணத்தை உள்ளிடுதல்===
இந்த பகுதியில் ஆவணங்களை தொகுப்பில் எப்படி உள்ளிடுவது என்று பார்ப்போம். இதற்காக mydb என்ற தரவுத்தளத்தையும் உருவாக்க உள்ளோம்.
 
பொதுவாக மாங்கோடிபியானது ஒரு தொகுப்பினை முதல் முறை பயன்படுத்தும்போதே உருவாகிவிடும். ஒரு தொகுப்பில் ஆவணங்களை உள்ளிடுதளுக்கு முன் தொகுப்பு உருவாக்கபட்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. தற்போது தேர்வு செய்ப்பட்டுள்ள தரவுத்தளம் mydb இல்லையெனில் use mydb மூலம் mydb என்ற தரவுத்தளத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும்.
 
<source lang="mysql">
db
use mydb
</source>
 
இப்போது நாம் இந்த mydb தரவுத்தளத்தில் i மற்றும் j என்ற இரண்டு ஆவணங்களை உள்ளீடு செய்ய உள்ளோம், அதற்க்கான கட்டளை:
 
<source lang="mysql">
j = { name : "mongo" }
k = { x : 3 }
db.testData.insert( j )
db.testData.insert( k )
</source>
 
இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது mydb என்ற தரவுத்தளமும், testData என்ற தொகுப்பும் உருவாக்கப்பட்டு பின்பு அதில் இந்த ஆவணங்களும் உள்ளீடாகும்.
 
==மாங்கோடிபி கட்டளைகள்==
[[படிமம்:Mongodbgetstarted.png|align=right|thumb|alt=மாங்கோடிபி கட்டளைகள்|மாங்கோடிபி கட்டளைகள்]]
===தற்போது எந்த தரவுத்தளம் பயன்பாட்டில் உள்ளது என்பதை பார்வையிட===
<source lang="mysql">
db
</source>
===என்னென்ன தரவுத்தளங்கள் உள்ளன என்பதை பார்வையிட===
<source lang="mysql">
show dbs
</source>
===நமக்கு தேவையான தரவுத்தளங்களுக்கு மாற===
<source lang="mysql">
use mydb
</source>
[[பகுப்பு:அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நூல்கள்]]
"https://ta.wikibooks.org/wiki/மாங்கோடிபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது