எண்முறை மின்னணுவியல்/எண்தளமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
எண்முறை தொழினுட்பங்கள் மற்றும் கட்டகங்கள் வடிவமைக்க மிகவும் எளிதானதாக இருக்கின்றன. இது உயர் துல்லியமும், நிரலாக்கத்தன்மையும், இரைச்சல் எதிர்ப்புத்தன்மையும், எளிதான தரவு சேமிப்பும், தொகுப்புச் சுற்று வடிவாக புனைய எளிதாகவும் அமைந்துள்ளன. இது மிகச் சிறிய வடிவில் மிக கடினமான செயல்களை செய்யக்கூடிய கருவிகளை தயாரிக்க வழிவகை செய்கிறது. எப்படியாயினும், இவ்வுலகம் ஒரு ஒப்புமை வடிவமாகும். விசை, இடம், வெப்பநிலை, திறன் போன்ற பெரும்பாலான புறநிலை மதிப்புகள் ஒப்புமையாகவே விளங்குகின்றன. இதனால் நாம் எண்முறை மின்னணுவியலில் உள்ளீடை செலுத்தும் பொழுது ஒப்புமை மாறிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. நமக்கு தேவைப்படும் வெளியீடும் ஒப்புமை மாறியாகவே எதிர்ப்பார்க்கிறோம். ஆகையால், நாம் எண்முறை மின்னணு சுற்றுகளில் உள்ளீடை ஒப்புமை-எண்முறை மாற்றியினால் எண்முறையாக்கம் செய்யவும், வெளியீடை எண்முறை-ஒப்புமை மாற்றியினால் ஒப்புமையாக்கம் செய்யவும் விளைகிறோம். நாம் இந்த நூலின் பிற்பகுதியில் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி விரிவாக படிக்கலாம். இந்தப் பாடப்பகுதியில் தரவினை வடிவாக்கம் செய்ய பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் எண்தளமுறைகளை காணலாம்.
 
==எண்முறைகள்==
பல்வேறு எண் முறைகளைப் பற்றி படிக்கும் முன் அவைகளில் பொதுவான அடிப்படைக்கூறுகளை முதலில் காணலாம். இந்த அடிப்படைக்கூறுகளைப் பற்றி அறிதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக மூன்று பண்புக்கூறுகள் உள்ளன. அவை எண்தளம் (எண்முறை எண்கள் ஒன்றினையும் சாராத தனி எண்களின் எண்ணிக்கை), இட பெறுமானங்கள் (ஒரு எண்ணில் உள்ள வெவ்வேறு எழுத்திற்கும் உள்ள இட மதிப்பு) மற்றும் உச்ச எண் (எண்முறை மிக உச்சக்கட்டமாக எழுதக்கூடிய கடைசி எண்).
 
[[பகுப்பு:எண்முறை மின்னணுவியல்]]
"https://ta.wikibooks.org/wiki/எண்முறை_மின்னணுவியல்/எண்தளமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது