எண்முறை மின்னணுவியல்/எண்தளமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
எண்ணுரு மதிப்புகளின் வடிவாக்கத்தில் பெரும்பாலும் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. அவை ஒப்புமையும், எண்முறையும் ஆகும். ''ஒப்புமை'' என்பது இரண்டு உச்ச அளவுகளுக்குள் வடிவாக்கம் செய்யும் தொடர் எண்ணுருமதிப்புகளாகும். இதில் குறிப்பிடத்தக்க கோட்பாடு என்னவென்றால் இதன் எண்ணுரு மதிப்புகளின் மாறுபாடுகள் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு வடிவாக்க வகை என்பதாகும். ''எண்முறை'' என்பது சில எண் அளவுகளில் ஏதேனும் ஒரு அளவில் வடிவாக்கல் ஆகும். அதாவது, இது வெவ்வேறு தனித்த மதிப்புகள் கொண்ட நிலைகளினால் வடிவாக்கம் செய்யும் வகையாகும். சுருங்கச் சொன்னால், ஒப்புமை வடிவாக்கம் தொடர் வெளியீடை தரும். எண்முறை வடிவாக்கம் தனித்த வெளியீடை உருவாக்கும். ஒப்புமைக் கட்டகங்கள் ஒப்புமை வடிவத்தில் உள்ள வெவ்வேறு புறநிலை மதிப்புகளை செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும். எண்முறை கட்டகங்கள் எண்முறை வடிவத்தில் உள்ள வெவ்வேறு புறநிலை மதிப்புகளை செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும்.
 
எண்முறை தொழினுட்பங்கள் மற்றும் கட்டகங்கள் வடிவமைக்க மிகவும் எளிதானதாக இருக்கின்றன. இது உயர் துல்லியமும், நிரலாக்கத்தன்மையும், இரைச்சல் எதிர்ப்புத்தன்மையும், எளிதான தரவு சேமிப்பும், தொகுப்புச் சுற்று வடிவாக புனைய எளிதாகவும் அமைந்துள்ளன. இது மிகச் சிறிய வடிவில் மிக கடினமான செயல்களை செய்யக்கூடிய கருவிகளை தயாரிக்க வழிவகை செய்கிறது. எப்படியாயினும், இவ்வுலகம் ஒரு ஒப்புமை வடிவமாகும். விசை, இடம், வெப்பநிலை, திறன் போன்ற பெரும்பாலான புறநிலை மதிப்புகள் ஒப்புமையாகவே விளங்குகின்றன. இதனால் நாம் எண்முறை மின்னணுவியலில் உள்ளீடை செலுத்தும் பொழுது ஒப்புமை மாறிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. நமக்கு தேவைப்படும் வெளியீடும் ஒப்புமை மாறியாகவே எதிர்ப்பார்க்கிறோம். ஆகையால், நாம் எண்முறை மின்னணு சுற்றுகளில் உள்ளீடை ஒப்புமை-எண்முறை மாற்றியினால் எண்முறையாக்கம் செய்யவும், வெளியீடை எண்முறை-ஒப்புமை மாற்றியினால் ஒப்புமையாக்கம் செய்யவும் விளைகிறோம். நாம் இந்த நூலின் பிற்பகுதியில் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி விரிவாக படிக்கலாம். இந்தப் பாடப்பகுதியில் தரவினை வடிவாக்கம் செய்ய பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் எண்தளமுறைகளை காணலாம்.
 
[[பகுப்பு:எண்முறை மின்னணுவியல்]]
"https://ta.wikibooks.org/wiki/எண்முறை_மின்னணுவியல்/எண்தளமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது