"எண்முறை மின்னணுவியல்/எண்தளமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

420 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
எண்ணுரு மதிப்புகளின் வடிவாக்கத்தில் பெரும்பாலும் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. அவை ஒப்புமையும், எண்முறையும் ஆகும். ''ஒப்புமை'' என்பது இரண்டு உச்ச அளவுகளுக்குள் வடிவாக்கம் செய்யும் தொடர் எண்ணுருமதிப்புகளாகும். இதில் குறிப்பிடத்தக்க கோட்பாடு என்னவென்றால் இதன் எண்ணுரு மதிப்புகளின் மாறுபாடுகள் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு வடிவாக்க வகை என்பதாகும். ''எண்முறை'' என்பது சில எண் அளவுகளில் ஏதேனும் ஒரு அளவில் வடிவாக்கல் ஆகும். அதாவது, இது வெவ்வேறு தனித்த மதிப்புகள் கொண்ட நிலைகளினால் வடிவாக்கம் செய்யும் வகையாகும். சுருங்கச் சொன்னால், ஒப்புமை வடிவாக்கம் தொடர் வெளியீடை தரும். எண்முறை வடிவாக்கம் தனித்த வெளியீடை உருவாக்கும். ஒப்புமைக் கட்டகங்கள் ஒப்புமை வடிவத்தில் உள்ள வெவ்வேறு புறநிலை மதிப்புகளை செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும். எண்முறை கட்டகங்கள் எண்முறை வடிவத்தில் உள்ள வெவ்வேறு புறநிலை மதிப்புகளை செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும்.
 
எண்முறை தொழினுட்பங்கள் மற்றும் கட்டகங்கள் வடிவமைக்க மிகவும் எளிதானதாக இருக்கின்றன. இது உயர் துல்லியமும், நிரலாக்கத்தன்மையும், இரைச்சல் எதிர்ப்புத்தன்மையும், எளிதான தரவு சேமிப்பும், தொகுப்புச் சுற்று வடிவாக புனைய எளிதாகவும் அமைந்துள்ளன.
 
[[பகுப்பு:எண்முறை மின்னணுவியல்]]
1,223

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/13334" இருந்து மீள்விக்கப்பட்டது