விக்கிநூல்கள்:2012 தமிழ் விக்கிநூல்கள் ஆண்டு அறிக்கை/2012 Tamil Wikibooks Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
2012 இல் பல்வேறு துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதற்பக்கம், சமூக வலைவாசல் ஆகியன மீள் வடிவமைக்கப்பட்டன. கொள்கைப் பக்கங்கள் திருத்தி எழுதப்பட்டன. பல்வேறு பக்கங்கள் விக்கிநூல்களுக்கு மாற்றப்பட்டன. தமிழ் விக்கிநூல்களில் கணிசமான தொடக்கநிலை துப்பரவுப் பணிகள் தொடர்ந்து உள்ளன. மேலும் உள்ள விக்கிமேற்கோள் பக்கங்கள் அங்கு மாற்றப்படவேண்டும். வகைப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிகள் செய்யப்பட வேண்டும். பல நூல்கள் விக்கிநூலாக்கம் செய்யப்பட வேண்டும்.
 
தமிழ் விக்கிநூல்கள் வளர அது பற்றிய அறிமுகம், அதன் தனித்தன்மை பயன்பாடு பற்றிய விளக்கம் விரிவாக பரப்புரை செய்யப்பட வேண்டும். குறிப்பாக தமிழ் விக்கி நிகழ்வுகளில் விக்கிநூல்கள் பற்றிய கூடிய விரிவான அறிமுகம் இடம்பெற வேண்டும். மாணவர்கள், தொழில்வல்லுனர்கள், குழந்தைகள், பொது வாசகர்கள் எனக் கவனப்படுத்தப்பட்டு உள்ளடக்கம் விரிவாக்கப்பட வேண்டும். அதிகம் தேடப்படும் விரும்பப்படும் தலைப்புகளிலும் நூல்கள் உருவாக்கப்பட வேண்டும்.
 
அனைத்து தமிழ் விக்கியூடகத் திட்டங்கள் போன்று தமிழ் விக்கிநூற்களுக்கு நடுநிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் கட்டற்ற விக்கிநூற்களை உருவாக்குதல் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் பேசுபவர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.