எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பத்தி 23 நிறைவு
பத்தி 24 நிறைவு
 
வரிசை 27:
 
[23]எல்லாச் சிறுகுழுமங்களும், அவை தங்களுக்குள் ஒற்றுமையுடனும், இறுக்கமாகவும் உறவு கொண்டதாக இருப்பின், அவை பெரிதான பொதுக் குமுகத்தில் இருந்து வேறானதாக இருக்கும். ஒவ்வொரு நாட்டுப்பற்றாளனும், வேற்றுமக்களிடம் இரக்கமின்றி நடந்துகொள்கின்றான்; அவனுக்கு அவர்கள் வெறும் மாந்தர்கள் மட்டுமே, வேறொன்றும் இல்லை <ref name=குறிப்பு-5>..</ref>. இந்தக் குறைபாடு தவிர்க்கமுடியாதது, ஆனால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததன்று. முக்கியமானது என்னவென்றால் தாம் வாழும் மக்களோடு நாம் நல்லபடியாக நடந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டில், எசுப்பார்த்தியன் (Spartiate, Spartan) தன்னலத்துடனும், பேராசையுடனும், அறமில்லாமலும் நடந்துகொள்கின்றான், ஆனால் அவனே தன்னுடன் வாழ்பவர்களிடம் தன்னலமில்லாமலும், அறமுடனும், சீரிணக்கத்துடனும் நடந்துகொள்கின்றான். பலவினப்பழக்க உலகநோக்கர் எனக் கூறிக்கொள்வோரை நம்பமுடியாது, அவர்கள் பல நூல்களில் உள்ள கடமைகளைப் பற்றிப் பேசுவர் ஆனால் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அவற்றை நிறைவேற்றமாட்டார்கள். அப்படிப்பட்ட மெய்யியலாளர்கள் தங்கள் அண்டை இனத்தார்களிடம் அன்புடன் நடக்காத தார்த்தாரை<ref>தார்த்தார் என்பார் துருக்கி மொழி பேசும் நடு ஆசிய மக்களில் ஒரு பகுதியினர். இப்பொழுது உருசியாவில் உள்ள குடியரசுகளில் ஒன்றாக இருக்கும் மக்கள் இனத்தவர்</ref>. விரும்புவார்கள்.
 
[24] இயற்கை மாந்தன் தனக்காத் தான் வாழ்கின்றான்; அவன் ஓர் எண்ணிக்கை அலகு, அவனே அவனுக்கு எல்லாம் பொறுப்பு, அவனைப் போன்றதும் அப்படியே. ஒரு குடிமகன் (அப்படியல்ல) முழுமையான கூட்டத்தின் (குமுகத்தின்) ஒரு பகுதி மட்டுமே (குடிமகன் பின்னத்தின் மேல் எண் போல், அடியெண் முழுக் குமுகம்), அவன் மதிப்பானது அவன் சார்ந்திருக்கும் குமுகத்தைப் பொறுத்தது. நல்ல குமுக அமைப்புகள், அவனை தன் இயற்கையில் இருந்து விலகிப் போகச் செய்து, தான் தனித்து இருந்த விடுபாட்டு நிலையை குமுகத்தோடு இணைத்துக் கட்டுப்பட்டு மொத்த குமுகத்தின் வரலாற்றின் ஒரு பகுதியாகவே மாறி மொத்தக் குமுகத்தையே பொருட்படுத்துகின்றான். உரோமையின் ஒரு குடிமகன் கேயசோ, அல்லது இலூசியசோ அன்று, அவன் உரோமானியன்; அவன் தன்னைவிடத் தன் நாட்டை அதிகம் நேசித்தான். பிடிபட்டிருந்த இரெகுலசு தான் ஒரு கார்த்தாச்சினியன் என்றே கூறிக்கொன்டான், தான் தன்னுடைய முதலாளிகளின் உடைமைப்பொருளாகிவிட்டபடியால். தன் வெளிநாட்டான் நிலையால் அவன் உரோமானிய மேலவையில் உட்கார மறுத்தான்; ஒரு கார்த்தாச்சினியன் வந்து ஆணையிட்டால் மட்டுமே அங்கு உட்காருவான். அவன் தன்னுடைய உயிரைக் காக்க மற்றவர்கள் முயன்றபொழுது வெறுப்புற்றான்; அவனுக்கு உள்ளுறுதி இருந்தது, வென்று திரும்பி வந்து வீரத்துடன் தன்னுடைய கொடுமையான இறப்பை ஏற்றான். இரெகுலசுக்கும் தற்கால மாந்தனுக்கும் இடையே ஒற்றுமை ஏதும் இல்லை.
 
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது