எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பத்தி 21 நிறைவு
பத்தி 22 முடிவு
வரிசை 23:
 
[21]பிறக்கும்பொழுதே நாம் உணர்ச்சியுடையவர்களாகப் பிறந்தோம், அதன் பின் நம்மைச் சுற்றியுள்ள பொருள்களால் நாம் பல்வேறுவிதமாக மாற்றம் உறுகின்றோம். நம் உணர்வுகளை நாம் தன்னுணர்வுடன் உணரத்தொடங்கியவுடன், முதலில் நம் போக்கு ஒன்று இன்பமாக இருப்பதால் விரும்பிச் செல்வதும், இன்பமாக இல்லாதவற்றில் இருந்து விலகிச் செல்வதுமாக இருக்கும், பிறகு அது நமக்கு வசதியாக இருக்கின்றது அல்லது அப்படி இல்லை என்பதாகவும், கடைசியாக மகிழ்ச்சி தருவது, நன்மையுடையது என்னும் நம்முடைய அறிவு மதிப்பீடுகளின் அடிப்படையில் அணுகுகின்றோம். நாம் மேலும் உணர்வுக் கூர்மையுடையவர்களாகவும், உயர் அறிவுடையவர்களாகவும் ஆகும்பொழுது இப்போக்குகள் இன்னும் வலிமை உடையதாகவும் நிலைபெற்றதாகவும் ஆகின்றன. ஆனால் இவை நம் பழக்கவழக்கங்களால் நாம் அடிமையுற்றபின்பு, அவை ஏறத்தாழ நம் தனிக்கருத்துகளால் ஒழுக்கமற்றுவிடுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படும் முன்னர் நம்முள் இருப்பனவற்றை நான் இயற்கை என்று உரைப்பேன்.
 
[22] எனவே இந்த அடிப்படை போக்குகளுடனேயே நாம் அனைத்தையும் தொடர்புபடுத்தவேண்டும்; அதாவது நம்முடைய கல்வியின் மூன்று நிலைகளும் ஒன்றோடு ஒன்று மாறுபடுவதாக மட்டுமாக இருப்பின் இப்படி இயலும். ஆனால் அவை ஒன்றோடு ஒன்று எதிரானதாக அமைந்துவிட்டால், அதாவது ஒருவர் தனக்காக உயர்வதுக்கு மாறாக பிறருக்காக எழுவதாக இருந்தால் என்ன செய்ய முடியும்? அப்பொழுது சீரிணக்கம் என்பது இயலாததாகிவிடும். இயற்கையையோ, குமுக நிறுவனங்களையோ எதிர்த்தாட வேண்டிய பொழுது நீங்கள் ஒரு மாந்தனை உருவாக்கவேண்டுமா அல்லது ஒரு குடிமகனை உருவாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டும், ஏனெனில் இரன்டையும் ஒரே நேரத்தில் செய்தல் இயலாது
 
{{status|25%}}
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது