எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பத்தி 21 நிறைவு
வரிசை 21:
 
[20] இயற்கை என்பது வெறும் பழக்கம்தான் என்கிறார்கள் [[குறிப்பு-4]]. இது எதைக் குறிக்கின்றது? இயற்கையுடன் முரண்படாதவாறு, வலுக்கட்டாயமாக பழக்கங்கள் உருவாக்கப்படுவதில்லையா? எடுத்துக்காட்டாக செடிகள் நிமிர்ந்து வளர்வதற்கு மாறாக வேறு கோணத்தில் வளரும்படி மாற்றப்படுவது. விடுவிக்கப்பட்ட நிலையிலும், அச்செடி அது வளைத்துவிடப்பட்ட வடிவிலேயே நிற்கின்றது. ஆனாலும் மரத்தில் ஊறும் பால் தன் முதல் திசையை மாற்றிக்கொள்ளவில்லை, அதில் தோன்றும் புதிய கிளைப்புகள் யாவும் நிமிர்ந்து நேராகவே இருக்கும். மாந்தர்களின் போக்குகளும் இப்படியே. அதே சூழல்களில் நாம் இருக்கும் வரை, பழக்கத்தால் ஏற்படும் அப்போக்குகளை, நமக்குச் சிறிதும் இயல்பல்லாத அப்போக்குகளை, கொண்டிருப்போம். ஆனால் சூழல் மாறியவுடன், பழக்கம் நின்றுவிடுகின்றது, இயற்கை தன் மீளாட்சி செய்கின்றது. கல்வி கட்டாயம் ஒரு பழக்கம்தான், ஏனெனில் சிலர் அதைச் சிலர் மறக்கின்றார்கள், வேறுசிலர் தக்கவைத்துக்கொள்கின்றனர். எப்படி இந்த வேறுபாடு எழுகின்றது? பழக்கங்களில் இயற்கையோடு ஒத்துப்போகும் அப்பழக்கங்களுக்கு மட்டும் இயற்கை என்னும் பெயரை வரையறுத்தால், குழப்பத்தில் இருந்து நாம் நம்மைக் காக்கமுடியும்.
 
[21]பிறக்கும்பொழுதே நாம் உணர்ச்சியுடையவர்களாகப் பிறந்தோம், அதன் பின் நம்மைச் சுற்றியுள்ள பொருள்களால் நாம் பல்வேறுவிதமாக மாற்றம் உறுகின்றோம். நம் உணர்வுகளை நாம் தன்னுணர்வுடன் உணரத்தொடங்கியவுடன், முதலில் நம் போக்கு ஒன்று இன்பமாக இருப்பதால் விரும்பிச் செல்வதும், இன்பமாக இல்லாதவற்றில் இருந்து விலகிச் செல்வதுமாக இருக்கும், பிறகு அது நமக்கு வசதியாக இருக்கின்றது அல்லது அப்படி இல்லை என்பதாகவும், கடைசியாக மகிழ்ச்சி தருவது, நன்மையுடையது என்னும் நம்முடைய அறிவு மதிப்பீடுகளின் அடிப்படையில் அணுகுகின்றோம். நாம் மேலும் உணர்வுக் கூர்மையுடையவர்களாகவும், உயர் அறிவுடையவர்களாகவும் ஆகும்பொழுது இப்போக்குகள் இன்னும் வலிமை உடையதாகவும் நிலைபெற்றதாகவும் ஆகின்றன. ஆனால் இவை நம் பழக்கவழக்கங்களால் நாம் அடிமையுற்றபின்பு, அவை ஏறத்தாழ நம் தனிக்கருத்துகளால் ஒழுக்கமற்றுவிடுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படும் முன்னர் நம்முள் இருப்பனவற்றை நான் இயற்கை என்று உரைப்பேன்.
 
{{status|25%}}
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது