எப்படிச் செய்வது/மறுசுழற்சி செய்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது.
 
மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.
வரிசை 21:
=== விற்பனை செய்தல் ===
பல நாடுகளில் மறுசுழற்சி செய்யப் படக் கூடிய பொருட்களை விற்க முடியும். வீடு வீடாக வந்தும் வாங்குவார்கள். இவ்வாறு வகைப்படுத்தி சேமித்து வைத்தவற்றை விற்றும் சற்று வருவாயும் பெற்றுக் கொள்ளலாம். போத்தல்கள் போன்றவற்றை சில கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்கலாம்.
 
=== சிறப்பு மறுசுழற்சி ===
நாம் அன்றாடம் பயன்படுத்தாத, எல்லது எறியாத பொருட்களை சிறப்பான வழிகளில் மறுசுழற்சி செய்ய வேண்டும். பூச்சு (paint), மருந்து, கலம் (battery), இலத்திரனியல் கருவிகள் ஆகியவற்றை சிறப்பான வழிகளில் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். எ.கா இலத்திரனியல் கருவிகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் உண்டு. பல சந்தர்ப்பங்களில் குளிரூட்டி போன்ற பெரிய பொருட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வர்.
 
=== மறுசுழற்சிப் பொருட்களை வாங்குங்கள் ===
போத்தில், காகிதம், உடுப்பு, தளபாடங்கள், கட்டிடப்பொருட்கள் என்று பல வகையான மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் விலை குறைவானவை, ஆனால் பயன்பாட்டில் ஈடானவை. அவற்றை கண்டறிந்து வாங்குங்கள்.
 
=== இணைந்து செயற்படுங்கள் ===