எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பத்தி-20
வரிசை 19:
 
[19] குறிக்கோள் என்ன? இயற்கையில் குறிக்கோள் என்பதுதான் நிறுவப்பட்டது. செம்மைநிலையை எட்ட மூன்று கூறுகளின் ஒத்தியக்கம் தேவை என்பதால், நாம் கட்டுப்படுத்தக்கூடிய இரண்டு கூறுகளும், நம் கட்டுப்பாட்டில் அடங்காத ஒன்றின் வழியைப் பின்பற்ற வேண்டும். ஒருகால் இந்த இயற்கை என்னும் சொல் மிகவும் தெளிவில்லாத பொருளைத் தருகின்றது. இதனை நாம் வரையறை செய்வோம்.
 
[20:] இயற்கை என்பது வெறும் பழக்கம்தான் என்கிறார்கள் [[குறிப்பு-4]]. இது எதைக் குறிக்கின்றது? இயற்கையுடன் முரண்படாதவாறு, வலுக்கட்டாயமாக பழக்கங்கள் உருவாக்கப்படுவதில்லையா? எடுத்துக்காட்டாக செடிகள் நிமிர்ந்து வளர்வதற்கு மாறாக வேறு கோணத்தில் வளரும்படி மாற்றப்படுவது. விடுவிக்கப்பட்ட நிலையிலும், அச்செடி அது வளைத்துவிடப்பட்ட வடிவிலேயே நிற்கின்றது. ஆனாலும் மரத்தில் ஊறும் பால் தன் முதல் திசையை மாற்றிக்கொள்ளவில்லை, அதில் தோன்றும் புதிய கிளைப்புகள் யாவும் நிமிர்ந்து நேராகவே இருக்கும். மாந்தர்களின் போக்குகளும் இப்படியே. அதே சூழல்களில் நாம் இருக்கும் வரை, பழக்கத்தால் ஏற்படும் அப்போக்குகளை, நமக்குச் சிறிதும் இயல்பல்லாத அப்போக்குகளை, கொண்டிருப்போம். ஆனால் சூழல் மாறியவுடன், பழக்கம் நின்றுவிடுகின்றது, இயற்கை தன் மீளாட்சி செய்கின்றது. கல்வி கட்டாயம் ஒரு பழக்கம்தான், ஏனெனில் சிலர் அதைச் சிலர் மறக்கின்றார்கள், வேறுசிலர் தக்கவைத்துக்கொள்கின்றனர். எப்படி இந்த வேறுபாடு எழுகின்றது? பழக்கங்களில் இயற்கையோடு ஒத்துப்போகும் அப்பழக்கங்களுக்கு மட்டும் இயற்கை என்னும் பெயரை வரையறுத்தால், குழப்பத்தில் இருந்து நாம் நம்மைக் காக்கமுடியும்.
==முழுநூல்==
[[எமிலி அல்லது கல்வி பற்றி]]
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது