எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பத்திகள் 16-17 முடிவு
பத்தி 18-19 நிறைவு
வரிசை 16:
[17] கல்விக்கான இந்த மூன்று கூறுகளில், இயற்கையில் இருந்து பெறும் கல்வி நம் கையில் இல்லை; பொருள்களில் இருந்து பெறும் கல்வியும் ஒரு பகுதிதான் நம் கையில் உள்ளது; மாந்தர்களிடம் இருந்து பெறும் கல்வி ஒன்றுக்கு மட்டுமே நாம் முழு ஆசிரியர். இங்கும்கூட நம் வல்லமை பெரும்பாலும் மாயத்தோற்றம்தான், ஏனெனில் ஒரு குழந்தையைச் சூழ்ந்திருக்கும் எல்லோருடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் யார் கட்டுப்படுத்தி இயக்க முடியும்?
 
[18] ஆகவே கல்வி என்பது அந்த அளவுக்குக் ஒரு கலையே, இது வெற்றியடைதல் என்பது ஏறத்தாழ இயலாதது, ஏனெனில் வெற்றியடைவதற்கான நிகழ்நிலை எந்த ஒரு தனி மாந்தனை மட்டும் பொருத்தும் இல்லை. ஒருவர் தன் முயற்சிகளால் செய்யக்கூடியதெல்லாம் ஏறத்தாழ குறிக்கோளை நோக்கி நகர்வதே. அதனை எட்டுவதற்கு நல்லூழ் (நல்வாய்ப்பு) தேவை
 
[19] குறிக்கோள் என்ன? இயற்கையில் குறிக்கோள் என்பதுதான் நிறுவப்பட்டது. செம்மைநிலையை எட்ட மூன்று கூறுகளின் ஒத்தியக்கம் தேவை என்பதால், நாம் கட்டுப்படுத்தக்கூடிய இரண்டு கூறுகளும், நம் கட்டுப்பாட்டில் அடங்காத ஒன்றின் வழியைப் பின்பற்ற வேண்டும்.
ஒருகால் இந்த இயற்கை என்னும் சொல் மிகவும் தெளிவில்லாத பொருளைத் தருகின்றது. இதனை நாம் வரையறை செய்வோம்.
==முழுநூல்==
[[எமிலி அல்லது கல்வி பற்றி]]
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது