பேச்சு:அறிவியல் விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நானும் முயற்சிக்கிறேன்
விரிவான விளக்கங்கள், படங்களுடன் கூடிய உரை நடை விளக்கமே மாணவர்களுக்குக் கூடுதல் பயனுள்ளதாக...
வரிசை 4:
 
::நன்றி தென்காசி சுப்பிரமணியன். நிச்சயம் உரையும் சேர்த்தே எழுதுவோம். --[[பயனர்:Inbamkumar86|இராஜ்குமார்]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 20:43, 24 ஜூன் 2012 (UTC)
 
 
:: சுவையான முயற்சி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 22:53, 24 ஜூன் 2012 (UTC)
 
::நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள். சாய்வெழுத்துக்களில் குறளை அமைக்கத்தான் வேண்டுமா? கவிதை எழுதியெல்லாம் எனக்கும் பழக்கமில்லை. எனினும், வாசித்தபோது, இன்னும் எளிமையாக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. நானும் முயற்சிக்கிறேன். வணக்கம்.--[[பயனர்:தகவலுழவன்|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:தகவலுழவன்|பேச்சு]]) 04:43, 25 ஜூன் 2012 (UTC)
 
நல்ல முயற்சி. ஆனால், கதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்பு முயற்சிகளுக்கு விக்கிநூலில் இடம் உண்டா என்று ஐயம் உள்ளது. பாட நூல்கள், பயனர் கையேடுகள் போன்றவை இடம்பெறுவதே வழக்கம்--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:08, 25 சூன் 2012 (UTC){{+1}}--[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 05:38, 25 சூன் 2012 (UTC)
 
:இது என் தனிப்பட்ட கவிதை அல்ல. இது நான் ஒருவன் மட்டும் உருவாக்க போவதில்லை. சொந்த உணர்ச்சிகளை, கருத்துக்களை எழுதப்போவதில்லை. நாம் அறிவியல் விதிகளை மொழிப்பெயர்த்து உரைநடையில் எழுதுவதை போல் குறளாக அழகுப் படுத்துகிறோம். நான் எழுதிய குறள் கடுந்தமிழில் இருந்தால் வேறொருவர் அதனை எளிமையாக செய்துவிடுவர். இது ஒரு கூட்டு முயற்சி. இதனால் பல அறிவியல் விதிகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றால் நன்று தானே. இதுவும் ஒரு அறிவியல் பாடநூல் அல்லவா? --[[பயனர்:Inbamkumar86|இராஜ்குமார் ]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 05:45, 25 சூன் 2012 (UTC)
 
கூட்டு முயற்சி தான். அறிவியல் பயனுடையது தான். ஆனால், தமிழ் இணையத்தில் உள்ள எண்ணற்ற தமிழ் வெண்பாமர்கள் இது போல் அனைத்துத் துறைகள் குறித்தும் எழுதப் புகுந்தால் தமிழ் விக்கிநூல்களின் கவனம் சிதறலாம். கருத்துகளை விடுத்து பாக்களின் இலக்கண விதிகளை ஆராய நேரம் போகலாம். படைப்பிலக்கிய வகையில் இம்முயற்சி நன்று. ஆனால், விரிவான விளக்கங்கள், படங்களுடன் கூடிய உரை நடை விளக்கமே மாணவர்களுக்குக் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். நன்றி--[[பயனர்:Ravidreams|Ravidreams]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:59, 25 ஜூன் 2012 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பேச்சு:அறிவியல்_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அறிவியல் விதிகள்" page.