விக்கிநூல்கள்:விக்கிநூல்கள் என்றால் என்ன?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
விக்கிநூல்கள் பாட நூல்கள், உரை நூல்கள், செய்முறை வழிகாட்டிகள், கையேடுகள் ஆகியவற்றுக்கானது. இந்த உள்ளடக்கங்கள் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், திண்ணைப் பள்ளிகள், விக்கிப்பல்கலைக்கழக வகுப்புகளில் பயன்படுத்தப்படலாம். தாமாக கல்வி கற்பவர்களும் பயன்படுத்தலாம். பொது விதியாக, பாட அல்லது கற்றலுக்கு உதவும் நூல்களே விக்கிநூல்களில் இடம்பெறும்.
 
== விக்கிநூல்கள் இவை அன்று ==
=== மூல ஆக்கங்களை இடுவதற்கான இடம் அன்று ===
விக்கிநூல்கள் திருக்குறள், திருமந்திரம், பாரதியார் படைப்புகள் போன்ற மூல ஆக்கங்களை இடுவதற்கான இடம் இல்லை. அதற்கு விக்கிமூலத்தைப் பயன்படுத்தவும்.
 
=== வலைப்பதிவு அன்று ===
விக்கிநூல்கள் உங்கள் கருத்துக்களைப் பகிரும் வலைப்பதிவு போன்ற தளம் இல்லை. இது கற்றலுக்குத் தேவையான நூல்களை உருவாக்குவதற்கானது.
 
=== படைப்பிலக்கியத்துக்கானது அன்று ===
விக்கிநூல்களில் புதினம், கதை, கவிதை போன்ற உள்ளடக்கங்கள் பாட நூலின் ஓர் அங்கமாக மட்டுமே சேர்க்க முடியும்.
 
=== புத்தாய்வுகள் வெளியிடுவதற்கான களம் அன்று ===
விக்கிநூல்களில் புதிய ஆய்வுகளை, புதிய கோட்பாடுகளை, புதிய சொற்களை வெளியிட முடியாது.
 
=== பரப்புரை/விளம்பரக் கருவி அன்று ===
தனி நபர், அரசியல் கட்சி, சமயங்கள் தொடர்பான பரப்புரை நெடியடிக்கும் நூல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.