சமையல் நூல்/மாங்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

தொகு
  • பெரிய ஊறுகாய் மாங்காய் - 1 கிலோ
  • நல்லெண்ணெய் - 500 கிராம்
  • கடுகு - 100 கிராம்
  • வரமிளகாத்தூள் - 250 கிராம் அல்லது காரத்திற்கு ஏற்றவாறு
  • கடுகு பொடி - 50 கிராம்
  • உப்பு - தேவையான அளவு (சற்று கூடுதலாக இருந்தால் நல்லது)

செய்முறை

தொகு
  1. பெரிய ஊறுகாய் மாங்காய்களை துருவி, பெரிய பாத்திரத்தில் உப்புடன்(தேவையான அளவுக்கு கொஞ்சம் கூடுதலாக சேர்க்கவும்) கலந்து வெய்யிலில் காயவைக்கவும்.
  2. 5 முதல் 6 நாட்கள் வரை காயவிடவும், பொதுவாக நீர் வற்றிஇருக்கும்வரை காய விடவேண்டும்
  3. பிறகு, ஒரு கடாய் அல்லது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்
  4. கடாயில் நல்லண்ணை விட்டு காய்ச்சவும்
  5. எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு சேர்க்கவும்
  6. பிறகு உப்பு-மாங்காய் கலவையை அதில் சேர்த்து தேவையான அளவு வரமிளகாத்தூள், அரைத்த வெந்தய பொடி(சிறிதளவு) சேர்த்து நன்கு கிளறவும்.
  7. பச்சை வாடை போகும் வரி கிளறி அடுப்பை அனைத்து, ஊறுகாயை நன்கு ஆறவைக்கவும்
  8. ஆறியதும் அதை ஒரு ஊறுகாய் ஜாடியில் அடைத்து உபயோகிக்கவும்