சமையல் நூல்/புளிச்சல்

என்னென்ன தேவை? நன்கு பழுத்த தக்காளி - 1 கிலோ, புளி - 100 கிராம், மிளகாய் தூள் - 150 கிராம், வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - 5 கிராம், பூண்டு - கால் கிலோ, உப்பு - இரண்டு கைப்பிடி, கடுகு - 2 டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 300 மில்லி. எப்படிச் செய்வது?

தக்காளியை 6 துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அகலமான மண்சட்டியில் தக்காளியையும் உப்பையும் போட்டு நன்கு குலுக்கி ஒரு நாள் ஊறவையுங்கள். தக்காளியில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்து மிதக்கும். இதை மூன்று நாள் வெயிலில் காய வையுங்கள். மூன்றாம் நாள் இரவில் புளியில் தண்ணீர் தெளித்து ஊறவையுங்கள். நான்காம் நாள், தக்காளி, புளி, வெந்தயம் மூன்றையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

பூண்டை உறித்து அம்மியில் வைத்து தட்டிக்கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டு தாளியுங்கள். கடுகு தெரிக்கும்போது, பூண்டை போட்டு லேசாக வதக்குங்கள். லேசாக நிறம் மாறும்போது, தக்காளி பேஸ்டை கொட்டி, அதோடு மிளகாய்தூள், பெருங்காயத்தைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதை அகலமான வாணலியில் கொட்டி ஒரு சுத்தமான துணியால் மூடி வெயிலில் காயவைத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம்!

"https://ta.wikibooks.org/w/index.php?title=சமையல்_நூல்/புளிச்சல்&oldid=13777" இலிருந்து மீள்விக்கப்பட்டது