தேவையான முக்கிய பொருட்கள்.

பசுப் பால் மூன்று கப் (அல்லது தேங்காய்ப் பால் )

பச்சை மிளகாய் 6

வெங்காயம் 3 (சிறிய வெங்காயம் எனில் 8)

செத்தல் மிளகாய் 4

உள்ளி 3 பல்

விரல் அளவு இஞ்சி

மஞ்சள் ஒரு தேக்கரண்டி.

தேசிக்காய் ஒன்று.

தாளிக்க கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய்.

செய்முறை:

பாத்திரத்தில் கடுகு, சீரகம், அரிந்த வெங்காயம் சிறிதளவு, செத்தல் மிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

இப்போ அதற்குள் சிறிது தண்ணீர் விட்டுமிகுதி வெங்காயம், நீளமாக அரிந்த பச்சை மிளகாய், உள்ளி, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை போட்டு மூடி கொதிக்க விடவும்.

முக்கிய குறிப்பு:

இப்போது சொதி தனது முக்கிய‌ அவதாரத்தை எடுக்கும் நேரம். நீங்கள் உருளைக் கிழங்கு போட்டால் கிழங்குச் சொதி, தக்காளிப் பழம் போட்டால் தக்காளிச்சொதி, சிறிய மீன் போட்டால் மீன் சொதி, ஒண்டும் போடாமல் விட்டால் பால் சொதி.

நீங்கள் போட்ட பொருட்கள் அவிந்தவுடன் அடுப்பை குறைந்த வெப்பத்தில் விட்டு, பாலை விடவும்.

பால் விட்ட பின் மூடி அதிக வெப்பத்தில் கொதிக்க விடப்படாது.

சிறிது நேரத்தில் கறி வேப்பிலையையும் போட்டு அடுப்பை அணைக்கவும்.

சிறிது ஆறிய பின் தேசிக்காயை பிழிந்து விட்டால்.......நாவூறும் சொதி தயார்

"https://ta.wikibooks.org/w/index.php?title=சமையல்_நூல்/சொதி&oldid=16666" இருந்து மீள்விக்கப்பட்டது