சமையல் நூல்/இடியாப்பம்
இடியாப்பம் செய்வதற்கு முதலில் மாவு தயார் செய்ய வேண்டும்.
பச்சரிசி- 1 கிலோ பச்சரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு அரவை இயந்திரத்தில் அரைத்த மாவை ஆவியில் வேகவைத்து வெய்யிலில் உலர்த்தி நைசாக சல்லடையில் சலித்துக்கொள்ளவேண்டும்.
இப்பொழுது இடியாப்பம் செய்வதற்கு மாவு தயார்.
மாவு - 1கிண்ணம் உப்பு - சிறிதளவு தண்ணீர்- 2 கிண்ணம்
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி சூடு பண்ணவேண்டும் தண்ணீர் குமிழ்குமிழாக வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு மாவைகொட்டி உப்பு சேர்த்து மெதுவாக கிண்டவும். பிறகு இட்லிபானையை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை இடியாப்ப அச்சில் இட்டு பிழியவேண்டும். வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.
இதனுடன் தேங்காய்பால் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை