கொல்லாமை
திருக்குறள் > துறவறவியல்
- 321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
- பிறிவினை எல்லாந் தரும்.
- 322. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
- தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
- 323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
- பின்சாரப் பொய்யாமை நன்று.
- 324. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
- கொல்லாமை சூழும் நெறி.
- 325. நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
- கொல்லாமை சூழ்வான் தலை.
- 326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
- செல்லாது உயிருண்ணுங் கூற்று.
- 327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
- இன்னுயிர் நீக்கும் வினை.
- 328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
- கொன்றாகும் ஆக்கங் கடை.
- 329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
- புன்மை தெரிவா ரகத்து.
- 330. உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
- செல்லாத்தீ வாழ்க்கை யவர்.