குழப்பும் அறிவியல் சொற்கள்/புவியியல்

கிளையாறு, துணையாறு தொகு

கிளையாறு (Distributary) - முதன்மை நீரோட்டத்தில் இருந்து விலகித் தனித்தோடும் ஆறு

துணையாறு (Tributary) - நேரடியாக கடலில் கலக்காமல் வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம்.

வானிலை, தட்பவெப்பநிலை தொகு

வானிலை (weather) - ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு குறித்தது

தட்பவெப்பநிலை (Climate) - ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்டகால நேரத்தில் உள்ள வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு குறித்தது