குற்றம் கடிதல்
திருக்குறள் > அரசியல்
- 431. செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
- பெருக்கம் பெருமித நீர்த்து.
- 432. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
- உவகையும் ஏதம் இறைக்கு.
- 433. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
- கொள்வர் பழிநாணு வார்.
- 434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
- அற்றந் தரூஉம் பகை.
- 435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
- வைத்தூறு போலக் கெடும்.
- 436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
- என்குற்ற மாகும் இறைக்கு?
- 437. செயற்பால செய்யா திவறியான் செல்வம்
- உயற்பால தன்றிக் கெடும்.
- 438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
- எண்ணப் படுவதொன் றன்று.
- 439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
- நன்றி பயவா வினை.
- 440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
- ஏதில ஏதிலார் நூல்.