குறிப்பு அறிவுறுத்தல்
திருக்குறள் > கற்பியல்
- 1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
- உரைக்கல் உறுவதொன் றுண்டு.
- 1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
- பெண்நிறைந்த நீர்மை பெரிது.
- 1273. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
- அணியில் திகழ்வதொன்று உண்டு.
- 1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
- நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
- 1275. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
- தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
- 1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
- அன்பின்மை சூழ்வ துடைத்து.
- 1277. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
- முன்னம் உணர்ந்த வளை.
- 1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
- எழுநாளேம் மேனி பசந்து.
- 1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
- அஃதாண் டவள்செய் தது.
- 1280. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
- காமநோய் சொல்லி இரவு.