குடிமை
திருக்குறள் > குடியியல்
- 951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
- செப்பமும் நாணும் ஒருங்கு.
- 952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
- இழுக்கார் குடிப்பிறந் தார்.
- 953. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
- வகையென்ப வாய்மைக் குடிக்கு.
- 954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
- குன்றுவ செய்தல் இலர்.
- 955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
- பண்பில் தலைப்பிரிதல் இன்று.
- 956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
- குலம்பற்றி வாழ்தும் என் பார்.
- 957. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
- மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
- 958. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
- குலத்தின்கண் ஐயப் படும்.
- 959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
- குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
- 960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
- வேண்டுக யார்க்கும் பணிவு.