கிராம நிர்வாக அலுவலர்
முன்னுரை
தொகுநம் இந்திய திரு நாட்டின் அடிப்படை ஆதாரமாக விளங்குபவை கிராமங்கள். ஏனெனில் கிராமங்களின் கட்டமைப்பில் தான் இந்தியா என்ற நம்முடைய மிகப்பெரிய நாடு உருவாக்கப்படிருக்கிறது. உலக அரங்கில் நமது நாடு தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் , இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களின் வளர்ச்சியினால் மட்டுமே அது சாத்தியமாகும் . இன்று இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களின் ஒன்றிணைந்த வளர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது . இந்த கிராமங்களின் வளர்ச்சி என்பது இன்றைக்கு தானே நிகழ்ந்து விட முடியாது . எனவே ஒரு கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற , அங்கே ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்பு தேவையாக இருக்கிறது . கிராம அளவில் ஒரு சிறந்த நிர்வாகம் அமைகின்ற போது அதன் காரணமாக கிராமங்களின் வளர்ச்சியிலும் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் . எனவே இந்த வளர்ச்சியில் குறிப்பட்டுச் சொல்லும்படியாக இந்த கிராமங்களில் பணிபுரியக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்களின் சிறப்பான செயல்பாடும் அவசியமாகிறது.
கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள்
தொகு- .கிராம கணக்குகளைப் பராமரித்தல் ,மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல்.
- .நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது .
- .பல்வேறு சான்றுகள் வழங்குவது தொடர்பாக அறிக்கை அனுப்புதல் .
- வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்கள் பெற . சிட்டா & அடங்கல்களின் நகல் வழங்குவது .
- பிறப்பு , இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது , அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது .
- தீ ,விபத்து, வெள்ளம் , புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது .
- .கொலை ,தற்கொலை , அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்
- .காலரா , பிளேக் & கால்நடை நோய்கள் , தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல் .
- .இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல் .
- .கிராம ஊழியர்களின் சம்பளபட்டியல் தயாரித்தல் .
- .கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல் .
- .அரசுக் கட்டிடங்கள் ,மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
- .புதையல் பற்றி உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தல் .
- .முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளை கவனித்தல் .
- .முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரித்தல் .
- .பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல் .
- .வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்கள் அளித்தல் & ஒத்துழைத்தல் .
- .கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல் .
- .சட்டம் ஒழுங்கு பேணுதல் ,உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல் , குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல் ,சட்டம் ஒழுங்கு பேணுதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் .
- .தேர்தல் பணிகள் மேற்கொள்வது .
- .கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்
- .பொதுச் சுகாதாரம் பராமரித்தல் .
- .நில ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது மற்றும் உயர் அலுவலர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுத்தல் .
- .சர்வே கற்களைப் பராமரிப்பது , காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது .
- .கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்து அறிக்கை அனுப்பதல் .
- .வருவாய்த் துறை அலுவலர்களூக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல் .
- .குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் , சந்தேகத்திற்கிடமான அன்னியர்கள் வருகையையும் தெரிவித்தல் .
- .கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
- .அரசு அவ்வப்போது தொடங்கும் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல் .
- .மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாச்சியருடன் ஒத்துழைத்தல்
- .பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் , ஏரிகளிலும , நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது அவற்றை முறையாகப் பராமரிப்பது .
- .கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து ஒரு பதிவேடு பராமரித்தல் .
- .பதிவு மாற்றம் [Transfer Rigistry ]அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பராமரித்தல் .
- .நிலப் பதிவேடுகளை கணிணி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது ,
- .கிராம அளவில் கடன் பதிவேடு மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்தல்.
- .கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்
- .பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுவது .
- .உயர் அலுவலர்கள் கொடுக்கும் பணிகளை மேற்கொள்வது .
ஆனால் மேற்கண்ட பல்வேறு விதமான முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ள , கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை தவிர , கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வேறு எந்த செலவுத் தொகைகளும் முன் கூட்டியோ , பின்னரோ வழங்கப்படுவதில்லை . அவ்வாறு வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை. இன்று அனைத்து அரசுப்பணிகளையும் விட ஒரு தனித்துவம் பெறுகிற பணியாக கிராம நிர்வாக அலுவலர் பணி அமைந்துள்ளது . காரணம் அனைத்து அரசு பணியாளர்களும் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள அலுவலர்களும் மக்களுடன் மறைமுகமாக தொடர்பு கொண்டுள்ளனர் . கல்வித் துறையில் பணிபுரிபவர்கள் மாணவர்களையும் , காவல் துறையில் பணிபுரிபவர்கள் குற்றவாளிகளையும் , மருத்துவத்துறையில் பணிபுரிபவர்கள் நோயாளிகளையும் , போக்குவரத்துத் துறையில் பணிபுரிபவர்கள் பயணிகளையும் , ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிபவர்கள் மக்கள் பிரதிநிதிகளையும் , என ஒரு சிலரை மையப்படுத்தியே பணிபுரிகின்றனர் . இவர்களின் பணியும் கற்பித்தல் , சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு , சுகாதாரம் பேணுதல் , பயணிகள் பரிமாற்றம் , வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல் , போன்ற ஒரு செயலை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது . ஆனால் மேலே கண்ட அனைத்து துறை அலுவலர்களுடனும் , பல்வேறு வகைப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனும் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் . இதனை கூர்ந்து கவனிக்கின்ற போது நமக்கு புரியும் . அது நம் தமிழகத்திற்கே உரிய சிறப்பு
தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட கிராமத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ,பொது சுகாதாரம் பராமரிப்பு , பொதுச் சொத்துகள் பராமரிப்பு , தேர்தல் பணிகள் மேற்கொள்வது , கனிம வளங்களைப் பாதுகாப்பது , இயற்கை வளங்களைப் பாதுகாப்பது இயற்கை இடர்பாடுகளின் போது விரைந்து செயல்பட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவது & அரசின் மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க களப்பணி மேற்கொள்வது போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் , கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . பிறப்பு & இறப்பு சான்றுகள் , அடையாளச் சான்று , அனுபோகச் சான்று , அடங்கல் சான்று , நில உரிமைச் சான்றுகள் வழங்குவது . வருமானச் சான்று சாதிச் சான்று , வாரிசுச் சான்று , இருப்பிட சான்று ,, சொத்து மதிப்புச் சான்று , ஆதரவற்ற குழந்தைச் சான்று , ஆதரவற்ற விதவைச் சான்று , கலப்புத் திருமணச் சான்று , கணவனால் கைவிடப்பட்டவர் சான்று , போன்ற பல்வேறு சான்றுகள் வழங்க பரிந்துரை செய்வது , நில உடமைகளை பராமரித்தல் , மரம் & நில வரிகளை வசூல் செய்தல் , மற்றும் இதர பாக்கிகளை வசூல் செய்தல் , மேலும் ஒவ்வொரு மாதமும் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு , அடங்கல் எழுதி , அது தொடர்பான கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் பட்டா மாற்ற விண்ணப்பங்களைப் பெறுவது , உட்பிரிவு மாற்றங்கள் கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது , சிறு விவசாயி சான்று கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது , மேலும் அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது . சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரிய விண்ணப்பங்களைப் பெற்று , அதனை உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்வது என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது .
கிராம மக்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்குத் துவங்குவது , கூட்டுறவு & மற்ற வங்கிகளில் கடன் பெறுவது , வீடுகள் , கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு பெறுவது , என அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை என்பது அவசியமானதாக கருதப்பட்டு வருகிறது . மேலும் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டாலோ , பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கருதினாலோ உடனடியாக காவல் துறையை அழைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் , கிராமத்தில் சுற்றுப் புறங்களை தூய்மையாக வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளவும் , சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளரை அழைத்து பேசி சுகாதார தூய்மை நடவடிக்கை மேற்கொள்ளவும் , கிராம மக்களில் பலருக்கு நோய் பரவி இருந்தாலோ , நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக கருதினாலோ மருத்துவ அலுவலரை அழைத்து பேசி அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளவும் , உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் கிராம நிர்வாக அலுவலர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர் .
காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலரின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதை கிராம நிர்வாக அலுவலரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ,அவர்களுக்குத் தெரிவிக்காமல் கிராமத்தில் உள்ள எந்த ஒரு நபரின் மீதும் காவல் துறையால் கைது நடவடிக்கை மேற்கொள்ள இயலாது ,கிராமத்தில் கொலை குற்றம் போன்ற மிகப்பெரிய குற்றத்தை செய்த ஒருவர் காவல் துறையில் சரணடைவது தனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதினால் அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண்டையலாம் போன்ற சட்டங்கள் இன்றைக்கும் அமலில் உள்ளதாக தெரிய வருகிறது . ஆனால் அது உறுதியாக தெரியவில்லை . ஒரு வேலை இந்த சட்டம் அமலில் இருந்தால் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான் . காவல் துறையின் அதிகார அத்து மீறலை தவிர்ப்பதற்கான நடை முறையாக இதனைக் கருதலாம் .ஒரு கால கட்டத்தில் வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் கிராம நிர்வாக அலுவலர் பெற்றிருந்தார் . ஆனால் அது தற்போது நடைமுறையில் இல்லை. ஆனாலும் இன்றைய சூழலில் கிராமங்கள் பல வளர்ச்சியினைக் ண்டிருக்கின்றன , வளர்ச்சிப் பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன , இத்தகைய உன்னதமான பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலரின் தகுதி உயர்த்தப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டு அவருக்கு கீழ் இரண்டு இளநிலை உதவியாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரின் கீழ் அனைத்து துறை அலுவலர்களும் பணிபுரிவதைப் போல , கிராம அளவில் பணிபுரியக்கூடிய அனைத்து துறை அலுவலர்களையும் கிராம நிர்வாக அலுவலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டிய இந்த கால கட்டத்தில் ஒரு கிராமத்திற்கு ஒரு கிராம நிர்வாக அலுவலர் , ஒரு உதவியாளர் என குறைவான எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர் . மேலும் இரண்டு மூன்று கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய சூழல் இன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்ப்பட்டிருக்கிறது .
. ஒரு சிலரின் தலையீடு , உயர் அதிகாரிகளின் நெருக்கடி , அளவுக்கு அதிகமான வேலைப்பழு , ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு பல கிராமங்களில் பொறுப்பு , போன்ற பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு கிராமங்களையும் நிர்வாகம் செய்யக் கூடிய கிராம நிர்வாக அலுவலர்கள் பெயரளவில் மட்டுமே நிர்வாகம் செய்து வருகின்றனர் என்பதே இன்று உள்ள சூழல் . தற்போது உள்ள சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும் எனக் கருதிபணியில் சேர்ந்தாலும் , சூழ்நிலைகள் அவர்களை செயல்படவிடாமல் செய்துவிடுகிறது .காரணம் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளும் , அதிகாரங்களும் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை . கிராம அளவில் ஏற்படக்கூடிய ஒரு சில பிரச்சனைகளின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் அதிகாரம் வழங்கப்படாமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்புடுகிறது .எனவே மிக முக்கியத்துவம் வாய்ந்த உன்னதமான பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டால் அது மக்களின் வளர்ச்சியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்துவதாகவே அமைந்துவிடும் . இது ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஏற்ப்படுத்தப்பட்ட சிறந்த கிராம நிர்வாகக் கட்டமைப்பை நாமே சீர்குலைத்துக் கொண்டோமோ ? என்ற சிந்தனையை உருவாக்கியிருக்கிறது .
கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் மேற்கண்ட பல்வேறு விதமான கிராம நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள முன்சீப் , கர்ணம் , என்ற அலுவலர்களும் தலையாரி , வெட்டியான் , நீர்க்கட்டி , என்ற பெயரில் உதவியாளர்களும் அவர்களுக்கு என்றே ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்துள்ளனர் . இதில் நீர்கட்டி என்ற பணியாளர் நீர்நிலைகளை கண்காணிப்பவராகவும் , அதில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுபவராகவும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் தகவல் தெரிவிப்பவராகவும் இருந்து வந்துள்ளார் . இன்று நீர்கட்டி என்ற பணியாளர் இல்லாமல் போனதனால் இன்று நீர் நிலைகளும் , ஓடைகளும் , ஏரிகளும் காணாமல் போய்விட்டன . நீர் நிலைகளில் பாதி அளவுக்கு அளிக்கப்பட்டு விளை நிலங்களாக மாறிவிட்டன . இதனால் நாட்டின் நீர்வளம் குறைந்து இப்போதே நமக்கு நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது . இதனால் விவசாயம் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது . தலையாரி , வெட்டியான் என்ற உதவியாளர்கள் தகவல் தெரிவிப்பவர்களாகவும் முன்சீப் , கர்ணம் என்ற அலுவலர்களின் பணிகளுக்கு உதவியாகவும் இருந்து வந்துள்ளனர்.
கர்ணம் என்ற அலுவலர்கள் கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் , நிலங்களை தணிக்கை செய்து பயிர் சாகுபடியை அடங்களில் பதிவு செய்தல் , விவசாயப் புள்ளி விவரங்கள் சேகரித்தல் , நில வரி மற்றும் அரசுக் கடன்கள் தொடர்பான கணக்குகளைப் பராமரித்தல் , ஆக்கிரமிப்புகளுக்குத் தகுந்த தீர்வை விதிக்க பரிந்துரை செய்தல் , அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளைக் கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்தல் , சர்வே அடையாளங்களைப் பாதுகாத்தல் , கனிம வளங்களைப் பாதுகாத்தல் , இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் . இன்று கர்ணம் என்ற பணியாளர் இல்லாமல் போனதனால் நம் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு உள்ளது என்ற உண்மையான புள்ளி விவரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது .மேலும் நாட்டில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்பட்டும் ,இயற்கை வளங்கள் அளிக்கப்பட்டும் , சர்வே அடையாளங்கள் அளிக்கப்பட்டும் , பகுதி அளவாக குறைந்துவிட்டன
முன்சீப் என்ற அலுவலர்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட கிராமத்தின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு [Regulation 11 of 1816 and Regulation 4 of 1821 ] , குற்றங்களைத் தவிர்த்து குற்றங்கள் குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுதல் [ Section 45 ofCRPC ] , ரூ 50 /- க்கு குறைவான மதிப்புள்ள சொத்து வழக்குகளைப் பைசல் செய்தல் [ Act 1 of 1889 ] , பிறப்பு , இறப்புக் கணக்குப் பதிவு செய்தல் [Act 111 of 1899 ] , இருப்புப் பாதைகள் பாதுகாத்தல் , அரசுக் கட்டிடங்களைப் பாதுகாத்தல் , நீர்பாசனப் பணிகள் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் , பொது சுகாதாரம் மற்றும் பொது வினியோகம் , ஆகிய பணிகளையும் நிலவரி மற்றும் அரசுக்கு சேர வேண்டிய இனங்களை வசூல் செய்தல் போன்ற பணிகளையும் , இதர முக்கியத்துவம் வாய்ந்த பணிகளையும் [ Cattle Trespass Act-1 of 1871 and Treasure Trove Act-6 1878 ] மேற்கொண்டு வந்துள்ளனர் . வருவாய் அதிகாரியாக மட்டுமல்லாது கிராமத்தின் பொது நிர்வாகத்தையும் கவனித்து வந்துள்ளனர் .இன்று மேலே கண்ட பல்வேறு வகைப்பட்ட பணிகள் மட்டும் இல்லாமல் பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது . ஆனால் இந்த பணிகளை மேற்கொள்ள இவர்களுக்கு முறையான கால இடைவெளி கிடைப்பதில்லை .
இன்றைய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர் கொள்கிற பிரச்சனைகள்
தொகுபல கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டமைப்பு என்பது சிறப்பாக இல்லை அதன் சுவர் , கதவு ஜன்னல் என அனைத்திலும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது . கழிப்பிட வசதி , மின் வசதி , குடியிருப்பு வசதி இல்லாமல் பாழடைந்து பராமரிக்கப்படாமல் உள்ளது .எனவே இது போனற கிரமங்களில் உள்ள கிராம கணக்குகளைப் பராமரிப்பதில் அந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிரமம் ஏற்ப்பட்டுள்ளது . எனவே அரசாங்கம் இதனை கவனத்தில் கொண்டு இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுப்பது அவசியமகிறது .
கிராம கணக்குகளை புதுப்பித்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதாலும் ஒரு கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பில் இரண்டு,மூன்று கிராமங்கள் இருந்ததாலும் கிராம கணக்குகள் மோசமான நிலையிலும் , முறையாகப் பராமரிக்கப் படாமலும் மேலும் சர்வே அடையாளங்கள் பகுதி அளவுக்கு மேல் மக்களால் அழிக்கப்பட்டு விட்டன . எனவே Resurvay பணி மேற்கொண்டு கிராம கணக்குகளை மறு கட்டமைப்பு செய்வதும் அவசியமாகிறது . கிராம நிர்வாக அலுவலர்கள் களப்பணி மேற்கொள்பவர்கள் அலுவலகத்தில் அம்ர்ந்த படியே வேலை பார்க்க முடியாது .பணியின் காரணமாக எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இருந்து நாற்பது , ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் சில நேர்வுகளில் கோட்டாச்சியர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் மாதத்தில் பல நாட்கள் சென்று வருகின்றனர் . ஆனால் இவர்களுக்கான பயணப்படிகள் மிகவும் குறைவக வழங்கப்படுகிறது .
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரண்டு , மூன்று கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்புக்களை வகிக்கின்ற போது அந்த கிராமங்களில் மேற்கொள்கின்ற பணிகளுக்காக எவ்விதமான செலவுத் தொகைகளோ , அதிகப்படியான ஊதியமோ அரசாங்கத்தால் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை .இது போன்ற காரணங்கள் திறமையாகவும் நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்களையும் சற்று தடுமாறச் செய்து விடுகிறது என்பது இன்று உள்ள நிலை .
வருத்திற்கு வருடம் மாறுகின்ற மக்கள் நலத் திட்ட பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க ஒரு குறிப்பிட்டத் தொகையை நிர்வாக அலுவலர்கள் செலவழிக்கின்றனர் .ஆனால் அதற்கான செலவுத் தொகை அவர்களுக்கு முன் கூட்டியே வழங்கப்படுவது இல்லை . அவ்வாறு வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை .இதற்கு நமது அரசாங்கம் கூறாமல் கூறும் பதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருமானம் அதிகமாம் . இது இலஞ்சம் வாங்கி மக்களிடம் கெட்ட பெயரை வாங்கி உங்கள் பணியை மேற்கொள்ளுங்கள் என்று ஊக்குவிப்பது போல் அல்லவா உள்ளது . மேலே கண்ட பல்வேறு வகைப்பட்ட பணிகளின் காரணமாகவும் ,தங்கள் பணிகளைச் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்காமல் இருப்பதாலும் , ஒரு வேலையை செய்து முடிப்பதற்கு முன்னதாகவே வேறொரு பணிகள் கொடுக்கப்படுவதாலும் கிராம நிர்வாக அலுவலர்களால் எந்த வேலையையும் முழுமையாகவும் , தெளிவாகவும் செய்து முடிக்க இயலாத சூழல் இன்று நிலவி வருகிறது .
நாங்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து கொடுப்பது மட்டுமே கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை .அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று எங்களுக்குத் தெரியாது ,அதனைப் பற்றிய கவலையும் எங்களுக்கு இல்லை , கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் குறைகளை அரசாங்கத்திடம் கூறி தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உயர் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர் . ஒரு வட்டார அளவில் செயல்படும் , மாவட்ட அளவில் செயல்படும் திறமையான அலுவலர்களை விட கிராமங்களில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் திறமையான நிர்வாகத்தினால் மட்டுமே அந்த கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற முடியும் . ஒரு மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது அந்த கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கே அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது .
அரசாங்கத்தின் ஒரு சில நடவடிக்கைகள் மூலம் இன்றைய சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் . நமது அரசாங்கம் கிராம நிர்வாக அலுவலர்களின் எதிர்கால முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு என்று தனித் தேர்வினை நடத்தி பணியில் அமர்த்தி வருகிறது . இருந்த போதிலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிக பட்சம் பதவி உயர்வு இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது . கிராம நிர்வாகம் பற்றி அறிந்திராத இளநிலை உதவியாளர்களுக்கு கூட வருவாய் துறையில் உயர் பதவிகள் வழங்கப்படுகிறது . ஆனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை
.வருவாய் துறையின் சார்பாக பல்வேறு வகையான பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் . இருந்த போதிலும் வருவாய் துறையில் உள்ள ஊழியர்களின் மத்தியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் துறையை சார்ந்தவர்கள் அல்ல என அன்னியமாக பார்க்கும் சூழலே இன்று நிலவி வருகிறது . எனவே வருவாய்த் துறை என்பது நிர்வாக அலுவலர்களின் தாய்த் துறை . கிராம நிர்வாக அலுவலர்கள் நிர்வாகத் துறையைச் சார்ந்தவர்கள் . இன்று சட்டம் ,ஒழுங்கு பிரச்சினைகள் தவிர மற்றபடி வருவாய்த் துறைக்கும் மற்ற துறைகளுக்கும் அதிகம் தொடர்பு இருக்கவில்லை ,ஒவ்வொரு துறையும் ஒரு தனித்த அமைப்பாக செயல்ப்ட்டுக் கொண்டிருக்கின்றன . கிராம நிர்வாக அலுவலர்களே மற்ற துறைகளை , வருவாய்த் துறையுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகின்றனர் .
கிராமங்களில் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளும் அரசின் நிகழ்ச்சிகளின் போது அதற்காக ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்த கிராம நிர்வாக அலுவலர்களை உயர் அலுவலர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை . கிராம நிர்வாக அலுவலர்களை வழ்த்திப் பேசி அவர்களை உற்சாகப் படுதுவதற்குக் கூட உயர் அலுவலர்கள் முன் வருவதில்லை . இது போன்ற சமயங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களோடு மக்களாக நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும் நிகழ்வு வேடிக்கையானது . தன்னுடைய பணிக் காலங்களில் வருவாய் ஆய்வாளர் , வட்டாச்சியர் , கோட்டச்சியர் , மாவட்ட ஆட்ச்சியர் என பொறுப்பு வகிக்கின்ற அந்த குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே தாங்கள் பணிபுரிகின்ற இடத்திலேயே தங்கி வேலை பார்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது . ஆனால் அதிக பட்சம் பதவி உயர்வுகளே இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் காலம் வரை தன் சொந்தங்களைப் பிரிந்து அதே கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும் என்ற நிலை ஒரு தனி மனித உரிமை மீறலாகவே தோன்றுகிறது .
கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு மாதத்தில் முப்பது நாட்களும் இரவு பகலாக வேலை பார்த்தாலும் இவர்களின் பணி ஓய்ந்து விடாது . இவர்களுக்கு முறையான விடுமுறை இல்லை என்பதும் ஒரு மிகப் பெரிய குறையாக உள்ளது .அரசின் பல்வேறு துறைகளில் மன உழைச்சல் இல்லாத மென்மையான பணிகளை மேற் கொள்பவர்களுக்கு கூட அதிகப்படியான ஊதியங்கள் வழங்கப்படுகிறது . ஆனால் ஆக்கம் தரும் மிக உன்னதமான மக்கள் நலப் பணியை மேற்கொள்ளும் , உடலாலும் , மனதாலும் சோர்வடைந்திருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவே . தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேர்ந்தாலும் கூட இது போன்ற நிர்வாக அடிப்படையில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதினால் ஒரு சில வருடங்களிலேயே அரசுப் பணித் தேர்வுகளை எழுதி வேறு துறைகளுக்குச் சென்று விடுகின்றனர் .இதனால் கிராம நிர்வாகம் வழுவிழந்து , பொலிவு இழந்து கணப்படுகிறது என்பது இன்று உள்ள நிலை . ,
கிராம கணக்குகளை கணிணி மயமாக்குதல்
தொகுகிராம கணக்குகளை புதுப்பித்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதாலும் , ஒரு கிரமா நிர்வாக அலுவலர் பல கிராமங்கலுக்கு பொறுப்பு வகித்ததாலும் , அவை மிக மோசமன நிலையிலும் , குழறுபடிகள் நிறைந்தும் காணப்படுகின்றன .அவற்றை முறையாகப் புதுப்பித்து கணிணி மயமாக்குதல் அவசியமாகிறது ,”அ” பதிவேடு , FMP , திருத்தப்பட்ட தூய கிராம சிட்டா , வருடத்திற்கு வருடம் மாறுகின்ற 7 மற்றும் 10 ல் பிரிவு 2 , அடங்கல் , கணக்கு எண் 13 ,14 போன்ற அனைத்து கிராம கணக்குகளும் கணிணி மயமாக்கப்பட வேண்டும் .மேலும் நில வரி மற்றும் இதர வரிகளை இணைய வழியாக செலுத்தி இரசீது பெறும் திட்டம் அறிமுகம் செயப்பட வேண்டும் . நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகின்ற இந்த சூழலில் மக்களின் மிகப்பெரிய சொத்து அவர்களின் நில உடைமைகள்தான் . எனவே இந்த மாறுதல்களையும்,திருத்தங்களையும் ஒரே நாளில் செய்து விட முடியாது .கிரமங்களின் பரப்பளவு ,மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பல மாதங்கள் ,ஒரு சில வருடங்கள் கூட ஆகலாம் .அதனை பரிசீலனை செய்து அதற்கு சரியான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் .
மனுதாரர்கள் ஒவ்வொரு சான்றுகளுக்காகவும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ,வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ,வட்டாச்சியர் அலுவலகம் , என அலைவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சான்றிதழ்களும் இணைய வழியாக வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன்படி தற்போது ஒரு சில மாவட்டங்களில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது .இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கணிணி மையம் என்ற தனியார் அமைப்பிற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது .பொதுமக்கள் இந்த மக்கள் கணிணி மையத்திற்கு சென்று பல்வேறு சான்றுகள் வேண்டி இணைய வழியாக விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட நாளுக்கு பிறகு சான்றிதழ்களை மக்கள் கணிணி மையம் வழியாகவே பெற்றுக்கொள்ள முடியும் .
ஆனால் இந்த சேவையில் ஒரு சில குறைபாடுகளையும் காண முடிகிறது .பொதுமக்கள் மக்கள் கணிணி மையம் வழியாக பல்வேறு சான்றுகள் வேண்டி விண்ணப்பம் செய்து கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் ,வட்டாச்சியர் என யாரையும் சந்திக்காமலே சான்றிதழ் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது .பொதுமக்கள் விண்ணப்பம் செய்வதோடு தனது வேலை முடிந்தது என்றென்னி கிராம நிர்வாக அலுவலரின் , வருவாய் ஆய்வாளரின் , வட்டாச்சியரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தனது வேலையை பார்க்க சென்று விடுகின்றனர் .
குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதாலும் , உயர் அலுவலர்கள் நெருக்கடி கொடுப்பதாலும் , விசாரணை மேற்கொள்ளாமல் சான்றிதழ் வழங்கும் சூழல் உருவாகியிருக்கிறது . மக்கள் கணிணி மையம் தனியார் அமைப்பாக இருப்பதாலும் , தகவல் தொழில் நுட்பங்கள் பெருகி வருவதாலும் , எந்த ஒரு தகவலையும் தவறாக காட்டும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது . தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் அவற்றிற்கு இல்லை . கிராம நிர்வாக அலுவலரைக் கூடச் சந்திக்காமல் சான்றிதழ் பெறுவது பல தவறுகளுக்கு வழி வகுக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும் . எனவே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இவ்வசதிகளை வழங்குவதே சரியானதாக இருக்க முடியும் . மேலும் ஒவ்வொரு சான்றுகளுக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுது . கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு இவ்வசதிகளை வழங்குகின்ற போது பெயரளவில் உள்ள வருவாய்த் துறையினால் அரசின் வருவாயும் அதிகரிக்கும் .
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் விரிவாக்கம்
தொகுநம் நாடு வேளாண்மையைச் சார்ந்த நாடு , நம் நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய பங்கினை வகித்து வருகிறது . கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்குகின்ற புள்ளி விவர அறிக்கையின் அடிப்படையில் தான் நாட்டின் விவசாய பொருளாதார புள்ளி விவர அறிக்கை தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை . மாதா மாதம் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு அடங்கள் எழுதுவது கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளில் ஒன்றாக இருக்கிறது . ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் எந்த நாட்களில் அல்லது தேதிகளில் பயிர் ஆய்வு பணி மேற்கொள்ள வேண்டும் , எத்தனை நாட்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்படவில்லை .இந்த பணியினை மேற்கொள்வதற்கான கால அளவு கிராமங்களுக்கு கிராமம் பரப்பளவின் அடிப்படையில் வேறுபடும் .ஒவ்வொரு கிராமமும் சராசரியாக மூன்றாயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கிறது .ஆக்கிரமிப்புகளை கண்காணித்தல் , சர்வே கற்களை கண்காணித்தல் , அரசு நிலங்களில் மரங்கள் வெட்டப்படுகின்றனவா ? , சட்டத்திற்கு விரோதமாக கனிம வளங்கள் பயன்படுத்தப்படுகிறதா ? போன்றவைகளை கண்காணித்தல் , போன்ற பணிகளுடன் பயிர் ஆய்வு பணி மேற்கொண்டு அடங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு காலை முதல் மதியம் வரை நூறு ஏக்கர் பரப்பளவை பயிர் ஆய்வு செய்யலாம் என வைத்துக்கொள்வோம் .
மதியத்திற்கு மேல் மக்களிடம் நிலவரி & மரவரிகளையும் , இதர பாக்கிகளையும் வசூல் செய்வது , அதற்கான கணக்குகளை முறையாக எழுதி பராமரிப்பது , நில உரிமை மாற்றத்திற்காக நில அளவை பணி மேற்கொள்வது , பட்டா மாற்றம் , உட்பிரிவு மாற்றம் போன்ற நில உரிமை மாற்றத்திற்கான விண்ணப்பங்களைப் பெற்று , பரிசீலனை செய்து , அதனை உரிய அலுவலருக்குப் பரிந்துரை செய்வது , அது தொடர்பான கணக்குகளில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்வது , அது தொடர்பான பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பது நில உரிமைச் சான்று , அனுபோகச் சான்று , அடங்கல் சான்றுகள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளவும் மக்களின் நலனுக்காக அரசு நிலங்களோ ,பட்டா நிலங்களோ அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படும் போதோ , அல்லது நில ஒப்படை செய்யும்போதோ அதற்கான அறிக்கை தயாரிப்பது போன்ற பணிகளையும் நில அளவைத் துறையின் சார்பாக , நில அளவை பயிற்சி பெற்ற , ஒரு முழு நேர அரசு பணியாளர் பணிபுரிந்தால் மட்டுமே சரியாகவும் தெளிவாகவும் செய்ய முடியும் .
மேற்கண்ட நிலை உருவாகின்ற போதுதான் நம்நாட்டின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்ற உண்மையான புள்ளி விவரத்தை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் . முடிந்த அளவிற்காவது நம் நாட்டின். இயற்கை வளங்களையும் , கனிம வளங்களையும் ,பாதுகாத்துக் கொள்ள முடியும் . கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்போது உள்ள பல்வேறு வகையான பணிச் சுமைகளின் காரணமாக மேற்கண்ட பணிகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர் . மக்களிடம் வசூல் செய்ய வேண்டிய நிலவரி & மரவரிகளை வசூல் செய்ய இயலாமல் ஜமாபந்தி நாட்களில் தாங்களே செலுத்தி கணக்கை முடிக்கும் கட்டாயத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தள்ளப்பட்டிருக்கிறனர்.
கிராமத்தின் பிறப்பு , இறப்பு பதிவாளராகவும் & சான்றுகள் வழங்குபவராகாவும் , வருமானச் சான்று , சாதிச் சான்று , இருப்பிடச் சான்று , வாரிசுச் சான்றுகள் , வேண்டி வரப் பெற்ற விண்ணப்பங்கள் ,சொத்துமதிப்புச் சான்று ,சிறுவிவசாயி சான்று , ஆதரவற்ற குழந்தைச் சான்று , ஆதரவற்ற விதவைச் சான்று , கணவனால் கைவிடப்பட்டவர் சான்று ,கலப்புத் திருமணச் சான்று ,பள்ளிச் சான்றுகள் தொலைந்ததற்காக வழங்கப்படும் சான்று , போன்ற மேலும் பல்வேறு வகையானச் சான்றுகள் வழங்க விசாரணை மேற்கொண்டு அதனை வட்டாச்சியருக்குப் பரிந்துரை செய்வது .சமுக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோரிய விண்ணப்பங்களைப் பெறுவது அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு வட்டாச்சியருக்குப் பரிந்துரை செய்வது போன்ற பணிகளையும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர் . கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை இல்லாமல் மேற்கண்ட பல்வேறு வகையான சான்றுகள் & உதவிகளை வட்டாச்சியரால் வழங்கஇயலாது என்பது குறிப்பிடத்தக்கது .
வருத்திற்கு வருடம் புதிது புதிதாக மாறுன்கிற மக்கள் நலத் திட்டங்களான உழவர் பாதுகாப்புத் திட்டம் , மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் , வண்ணத் தொலைக்காட்சிபெட்டி வழங்கும் திட்டம் , மின் விசிறி , மிக்சி , கிரைண்டர் வழங்கும் திட்டம் , அம்மா திட்டம் , ஆதார் திட்டம் ,விரைவு பட்டாமாற்ற திட்டம் , போன்ற பல முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு களப்பணி மேற்கொள்வது அதற்கு செயல் வடிவம் கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் .ஆனால் மேலே கண்ட பல்வேறு வகையான முக்கியத்துவம் வாய்ந்த சான்றுகள் , உதவித் தொகைகள் , மக்கள் நலத் திட்டப் பணிகள் , போன்ற பல்வேறு வகையான பணிகளையும் வருவாய் துறையின் சார்பாக கணிணி அறிவு நிறைந்த , ஒரு முழுநேர அரசுப்பணியாளர் மேற்கொண்டு செய்தால் மட்டுமே சரியாகவும் , தெளிவாகவும் குளறுபடிகள் இல்லாமலும் பார்த்துக் கொள்ள முடியும் .
கிராம நிர்வாக அலுவலரின் தகுதியை உயர்த்துதல்
தொகுகிராமங்களில் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிக பட்சம் பதவி உயர்வு இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது . எனவே கிராம நிர்வாக அலுவலர்களின் திறனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நிர்வாக அலுவலர்கள் அனைவரையும் group 2 என்னும் நிலையில் தரம் உயர்த்துதல் வேண்டும் . இனி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளவர்கள் பட்டப்படிப்பு முடிதவர்கள் [grup 2 ]என்ற நிலையில் தேர்வு செய்யப்பட வழிவகை செய்யப்பட வேண்டும் .
அவர்களுக்கான தேர்வு முறையிலும் சில மாறுதல்களைச் செய்யலாம் .இதன் மூலம் தகுதியானவர்கள் மட்டுமே நிர்வாக அலுவலர்களாக தேர்வு செய்யப்படுவது மேலும் உறுதியாகும் .மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய வழிவகை செய்யப்பட வேண்டும் . அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட நிர்வாகத் துறையின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் வேறு துறைகளுக்கு மாறுதல் வழங்கி அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் .
இதில் ஏற்படக் கூடிய பிரச்சினை என்னவென்றால் பத்தாம் வகுப்பு தரத்தில் உள்ளவர்கள் எங்கள் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது . ஆனால் பத்தாம் வகுப்பு தரத்திலான கூடுதல் பணியிடங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால் , மிகச் சிறந்த நிர்வாகத்தை எதிர் பார்க்கும் அனைவரும் இதனை வரவேற்ப்பார்கள் . நமது அரசாங்கம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக பல்லாயிர கணக்கான காவல் பணிகளை உருவாக்கி உள்ளது . மிகச் சிறந்த அறிவாளிகளாக மாணவர்களை உருவாக்க இலட்சக் கணக்கில் ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி , பணியமர்த்தி வருகிறது. இந்த குடிமக்களை வழி நடத்த , மிகச் சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க கூடுதல் பணியாளர்களை நியமிப்பது குறித்து நமது அரசு ஆலோசனை செய்ய வேண்டும் .
இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்கி பணிபுரியும் நேரத்தை விட வட்டாச்சியர் அலுவலகத்திற்குத் தான் அதிகம் செல்ல வேண்டி இருக்கிறது . எனவே அதிக பட்ச்சம் இன்று கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்கி பணிபுரியும் சூழல் உருவாக வேண்டும் .
கிராமம் , ஒன்றியம் , வட்டார அளவில் " நிர்வாகத் துறை "யை ஏற்படுத்துதல்
தொகுதகவல் தொழில் நுட்ப வசதிகளை வழங்குதல்
தொகுகிராமங்களில் நடைபெறக்கூடிய சமூக விரோதச் செயல்களைக் கண்காணிக்க ,சட்டத்திற்கு புறம்பான செயல்களைக் கண்காணிக்க , என கிராமங்களின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனைக் கண்காணிக்கும் மைய்யமாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மாற வேண்டும் . மேலும் அவ்வப்போது தொடங்கும் அரசின் நலத் திட்டங்களை அறிவிக்கவும் , மக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவது குறித்தான விழிப்புணர்வு பெறவும் , சமுதாய விழிப்புணர்வு பெறவும் , ஒவ்வொரு தெருவிற்கும் ஒலிப்பெருக்கி வசதிகள் வழங்கப்பட வேண்டும் .