கல்வி
திருக்குறள் > அரசியல்
- 391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
- நிற்க அதற்குத் தக.
- 392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
- கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
- 393. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
- புண்ணுடையர் கல்லா தவர்.
- 394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
- அனைத்தே புலவர் தொழில்.
- 395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
- கடையரே கல்லா தவர்.
- 396. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
- கற்றனைத் தூறும் அறிவு.
- 397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
- சாந்துணையுங் கல்லாத வாறு.
- 398. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
- எழுமையும் ஏமாப் புடைத்து.
- 399. தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
- காமுறுவர் கற்றறிந் தார்.
- 400. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
- மாடல்ல மற்றை யவை.