கல்லாமை
திருக்குறள் > அரசியல்
- 401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
- நூலின்றிக் கோட்டி கொளல்.
- 402. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
- இல்லாதாள் பெண்காமுற் றற்று.
- 403. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
- சொல்லா திருக்கப் பெறின்.
- 404. கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
- கொள்ளார் அறிவுடை யார்.
- 405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
- சொல்லாடச் சோர்வு படும்.
- 406. உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
- களரனையர் கல்லா தவர்.
- 407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
- மண்மாண் புனைபாவை யற்று.
- 408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
- கல்லார்கண் பட்ட திரு.
- 409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
- கற்றார் அனைத்திலர் பாடு.
- 410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
- கற்றாரோடு ஏனை யவர்.