கலைக்களஞ்சியம் என்றால் என்ன?
கலைக்களஞ்சியம் (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[3]