கனவு நிலை உரைத்தல்
திருக்குறள் > கற்பியல்
- 1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
- யாதுசெய் வேன்கொல் விருந்து.
- 1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
- உயலுண்மை சாற்றுவேன் மன்.
- 1213. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
- காண்டலின் உண்டென் உயிர்.
- 1214. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
- நல்காரை நாடித் தரற்கு.
- 1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
- கண்ட பொழுதே இனிது.
- 1216. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
- காதலர் நீங்கலர் மன்.
- 1217. நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
- என்எம்மைப் பீழிப் பது.
- 1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
- நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
- 1219. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
- காதலர்க் காணா தவர்.
- 1220. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
- காணார்கொல் இவ்வூ ரவர்.