கதிரியல்.
  கதிர்களின் பண்புகளை விரிவாக ஆராயும் அறிவியல் பகுதி என்றாலும்,நடைமுறையில் கதிரியல் என்பது எக்சு ,காமா கதிர்களின் தோற்றம்,அவைகளின் பண்பு,அவைகளின் பயன்பாடு,உயிர்களுக்கு ஊறு விழைவிக்கும் இக்கதிர்களிலிருந்து பாதுகாப்பு,அவைகள் பயன்படும் வெவ்வேறு அறிவியல் துறைகள் என அனைத்தையும் அடக்கிய அறிவியல் புலமாகும்.இன்று சாதாரண மக்களுக்கு கதிரியல் என்பது மருத்துவத் துறையில் இக்கதிர்களின் பயன்பாடு என்றே அறியப்படுகிறது.கதிரியலை முழுமையாகத் அறிந்து கொள்ள மின்சாரம், காந்தவியல் கதிரியக்கம் போன்ற இயற்பியல் பற்றிய அடிப்படை புரிதலும் அறிவும் தேவைப்படுகிறது.
  மேலும் கதிரியல்
   # நோயறி கதிரியல்
   # கதிர் மருத்துவம்   
   # அணுக்கரு மருத்துவம்,
  கதிர்மருத்துவம்
   * அண்மைக் கதிர்மருத்துவம்
   * தொலைக் கதிர் மருத்துவம்
   * துளைஉள் கதிர்மருத்துவம் என்று பலமுறைகள் உள்ளன.

நோயறி கதிரியலில் உடலின் உளுறுப்புகளையும் அவைகளில் தோன்றியுள்ள நோயினைப் பற்றியும் மருத்துவத்தினால் அவ்வுறுப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.இங்கு எக்சு கதிர் படத்தாளின் துணையுடன் உள்உறுப்புகளின் படம் எடுத்து தெரிந்து கொள்ளப்படுகிறது.படம் நிரந்தரமாக சில காலம் வரையிலும் காப்பாக வைத்துக் கொள்ள முடியும்.பின்நாளில் உதவக்கூடும்

 மாறாக ஒளிர்திரையில் படம் பெற்று ஆயும் முறையில் உள் உறுப்புகளின் இயக்கத்தினையும் அவ்வப்போதுள்ள நிலையினையும் ஓர் ஒளிர்திரையில் காணமுடியும்.நோயாளிக்கு அதிக கதிர் ஏற்பளவினைக் கொடுப்பதால் மிகவும் தேவை என்றால் மட்டுமே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
 பல உறுப்புகளையும் ஆய தனித்தனி கருவிகள் உள்ளன.

இன்று கதிரியல் துறையில் கணினி கதிர்பட முறை,காந்த ஒத்ததிர்வு படமுறை, மீயொலி பட முறை ,எண்ணிம கதிர்பட முறை,கணினி கதிர் படமுறை மற்றும் பல நுட்பமான கருவிகள் வந்துள்ளன.

 இப்படிப்பட்ட எக்சு,காமா,மற்றும் துகள் கதிர்வீச்சு கவனமாகக் கையாளவிடில் பல தீய விளைவுகளை நோயாளிக்கும் மருத்துவர்களுக்கும் தொழில் நுட்பனர், செவிலியர், ஏன் பொதுமக்களிடமும் தோற்றுவிக்கக் கூடும்.கதிர் உயிரியல் என்னும் அறிவியல் பிரிவில் இவைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம்.இத்தீய விளைவுகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கதிர் வீச்சிலிருந்து பாதுகாப்பு என்னும் பிரிவில் காணலாம்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=கதிரியல்&oldid=16785" இலிருந்து மீள்விக்கப்பட்டது