ஒதிய மரம் மிகவும் மென்மையானது. எனவே இதன் மரத்தை எதற்கும் பயன்படுத்த இயலாது. "ஒதி பெருத்து உத்தரத்திற்கு ஆகுமா?" என்ற சொல்வழக்கு இதனை விளக்கும். ஒதிய மரத்தின் இலைகள், காய்களாலும் எந்தப் பயனும் இல்லை. வேலி ஓரங்களில் இதனை வளர்க்கலாம்.

ஒதிய மரத்தின் கிளையை வெட்டி நட்டால் துளிர் விட்டு வளரும் தன்மை கொண்டது. இதன் பட்டை தடிமனாக இருக்கும். திருமணம் நடக்கும் இடத்தில் அரசாணி கால் நடுவது வழக்கம். அதில் மூங்கில் குச்சியையும் ஒதிய மரத்தின் குச்சியையும் சேர்த்து கட்டி நட்டு சடங்கு செய்வர். இதன் பொருள் தம்பதியர் வாழ்வில் மூங்கில் தன் பக்கத்தில் குருத்துகளை உருவாக்கி பல்கி பெருகுவது போல் ஏராளமான குழந்தைகளைப் பெற்று தன் குலத்தை விளங்க செய்யவே அந்த சடங்கு செய்யப்படுகிறது. ஒதிய மரத்தின் கிளையை வெட்டி வேறு இடத்தில் நட்டாலும் துளிர் விட்டு மரமாவது போல் மணப்பெண்ணானவள் தன் குடும்பத்தை விட்டு வேறு குடும்பத்திற்கு வந்தாலும் வந்த இடத்து வம்சம் பெருக உதவுவாள் எனபது ஐதீகம்.

இலக்கியத்தில் ஒதிய மரம்.

தொகு
ஒதிதான் பெருத் தென்ன காட்டிலவு மலரி லென்ன

என்று குமரேச சதகப்பாடல் கூறுகிறது.

ஒதிய மரம் எவ்வளவு பெருத்தாலும் அதனால் எப்பயனும் இல்லை என்பது இதன் பொருள்

"https://ta.wikibooks.org/w/index.php?title=ஒதிய_மரம்&oldid=13387" இலிருந்து மீள்விக்கப்பட்டது