எப்படிச் செய்வது/டி.எசுபேசு நிறுவுவது எப்படி?

டி.எசுபேசு என்பது எண்ணிம ஆவணங்களை மேலாண்மை செய்யப் பயன்படும் ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். குறிப்பாக ஒரு நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆவணங்களை மேலாண்மை செய்ய இது பயன்படுகிறது. மீதரவுகளைக் கையாழுதல் (meta data), பணிப் பாய்வுமுறை (work flow), இடைமுகம், பல்வேறு ஆவண வடிவங்களுக்கான (document formats) ஆதரவு ஆகியவை டி.எசுபேசின் சிறப்புகள். இதை நிறுவ பராமரிக்கத் தேவையான ஒப்பீட்டளவிலான கூடிய நுட்ப அறிவு இதன் ஒரு குறைபாடு ஆகும்.

டி.எசுபேசை நீங்கள் லினிக்சு/யுனிக்சிலும் வின்டோசு வழங்கிகளிலும் நிறுவலாம். பொதுவாக லினக்சு சூழலில் நிறுவுவதே இலகுவானது. இந்தச் செய்முறை லினக்சில் நிறுவுவதற்கானது.

பின்வரும் செய்முறை அதிகாரபூர்வ செய்முறையைப் பயன்படுத்துகையில் உதவும் வகையில் எழுதப்படுகிறது. துல்லியமான தகவல்களுக்கு அதிகாரபூர்வ செய்முறையையே பயன்படுத்தவும்.

சூழல்

தொகு
  • லினக்சு
  • அப்பாச்சி
  • யாவா
  • போசுகிரசு
  • ரொம்கற்

இவற்றின் அமைவுகளை வடிவாக்க உங்களுக்கு மூலக் கடவுச்சொல் (root password) தேவைப்படலாம்.

அடைவுகள்

தொகு
  • மூல அடைவு [dspace-source]: டி.எசுபேசை தரவிறக்கி வைத்துக் கொண்ட அடைவு.
  • நிறுவல் அடைவு [dspace]: டி.எசுபேசை நிறுவுவதற்கான அடைவு.
  • வலை deployment அடைவு: ரொம்கற் என்றால் டி.எசுபேசின் webapps/ அடைவில் இருப்பவை எல்லாம் ரொம்கற் webapps அடைவிற்குள் இடப்படலாம்.

செய்முறை

தொகு
1. லினக்சில் ஒரு பயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
useradd -m dspace
2. டி.எசுபேசை மூல அடைவில் தரவிறக்கிக் கொள்ளவும்.
3. போசுகிரசில் டி.எசுபேசுக்கான ஒரு தரவுத்தளத்தை உருவாக்கிக் கொள்ளவும். டி.எசுபேசுக்கான ஒரு போசுகிரசு பயனரையும் உருவாக்கி கொள்ளவும். இந்த போசுகிரசு பயனருக்கு அந்த தரவுத்தளத்துக்கான எல்லா உரிமைகளையும் வழங்கவும்.
4. டி.எசுபேசு மூல அடைவில் /dspace/config/dspace.cfg என்ற கோப்பில் தகுந்த அமைவு மாற்றங்களைச் செய்யவும்.
5. டி.எசுபேசு நிறுவப்படுவதற்கான அடைவை உருவாக்கவும். டி.எசுபேசு லினக்சு பயனரை இந்த அடைவின் உரிமையாளர் ஆக ஆக்கவும்.
mkdir [dspace]
chown dspace [dspace]
6. டி.எசுபேசு மூல அடைவில் நின்று கொண்டு அப்பாச்சி மாவென் கட்டுமானக் கருவியைப் பயன்படுத்தி டி.எசுபேசி நிறுவல் பொதியை உருவாக்கவும். (குறிப்பு: mvn நிறுவப்பட்ட bin அடைவில் உள்ள mvn ஆன முழு பாதை தரப்படவேண்டி இருக்கலாம்.)
cd [dspace-source]/dspace/
mvn package
7. டி.எசுபேசு மூல அடைவில் நின்று கொண்டு அப்பாச்சி ஆன்ற் கட்டுமானக் கருவியைப் பயன்படுத்தி பின்வரும் கட்டளையை இடவும். இங்கேயும் நீங்கள் ant க்கு ஆன முழு பாதையைத் தரவேண்டி வரலாம்.
cd [dspace-source]/dspace/target/dspace-[version]-build
ant fresh_install
8. டி.எசுபேசு webapps கீழ் உள்ள அடைவுகளையும் கோப்புக்களையும் அடைவை படி எடுத்து ரொம்கெற் webapps உள்ளே இடவும். ரொம்கெற்றை திரும்பித் தொடங்கவும்.
9. டி.எசுபேசுக்கான நிர்வாகி கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.
[dspace]/bin/dspace create-administrator
10. யேசுபி அல்லது எக்சு.எம்.எல் இடைமுகத்தில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவும். எக்சு.எம்.எல் தற்போது கூடுதலாக பயன்படுத்தப்பட்டு வரும் இடைமுகம் ஆகும்.
JSP பயனர் இடைமுகம் - (எ.கா) http://dspace.myu.edu:8080/jspui
XML (அல்லது மான்கின்) பயனர் இடைமுகம் - (எ.கா) http://dspace.myu.edu:8080/xmlui

எதிர்பாக்க கூடிய சிக்கல்கள்

தொகு
  • நீங்கள் mvn இயக்கப் பாக்கும் போது "Error: JAVA_HOME is not defined correctly." என்ற தவறை எதிர்நோக்கக் கூடும்.
மேற்கண்ட சிக்கலைச் சந்தித்தால் கட்டளைக் கோட்டில் நின்றபடி export JAVA_HOME = /யாவாவுக்கான/வழி இடவும்.