எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/மீதரவுச் சீர்தரங்கள்

மீதரவுகள் என்பது தகவல் வளங்களைப் பற்றிய தகவல்கள் ஆகும். இவை பல்வகைப்படும்:

விபரிப்பு மீதரவு (Descriptive Metadata)

தொகு

தகவல் வளத்தை கண்டுபிடிக்க, பயன்படுத்த உதவும் வண்ணம் விபரித்து அமையும் தரவுகள்; எ.கா டப்பிளின் கருவகம்.

நிர்வாக மீதரவு (Administrative Metadata)

தொகு

தகவல் வளத்தை நிர்வாகிக்க உதவும் தரவுகள், எ.கா PREMIS/பிரமிசு.

நிர்வாக - பாதுகாப்பு மீதரவு (Preservation Metadata)

தொகு

தகவல் வளத்தை பாதுகாக்கப் பயன்படும் தரவுகள், எ.கா PREMIS/பிரமிசு.

நிர்வாக - உரிமைகள் மீதரவு (Rights Metadata)

தொகு

காப்புரிமைகள், அணுக்கங்கள் தொடர்பான தரவுகள், எ.கா PREMIS/பிரமிசு.

நுட்ப மீதரவு (Technical Metadata)

தொகு

தகவல் வளத்தின் நுட்ப விபரங்களைக் கொண்ட தரவுகள், எ.கா MIX, textMD, MPEG-7, MPEG-2.

கட்டமைப்பு மீதரவு (Structural Metadata)

தொகு

தகவல் வளத்தின் அமைப்பை விபரிக்கும் தரவுகள், எ.கா EPub, Pdf.

பொதியாக்க/பரிமாற்ற சீர்தரம் (Packaging/Interchange Standard)

தொகு

மேற்குறிப்பிடப்பட்ட மீதரவுகளையும், உள்ளடக்கத்தையும் பொதியாக்க, பரிமாறப் பயன்படும் சீர்தரம், எ.கா METS/மெற்சு