எக்சு.எம்.எல் தொழில்நுட்பங்கள்/எக்சு.எம்.எல்

எக்சு.எம்.எல் (XML) என்று சுருக்கமாக ஆங்கிலத்தில் அறியப்படும் நீட்டப்படக்கூடிய குறி மொழி (eXtensible Markup Language) என்பது தேவைக்கேற்றவாறு ஒரு குறி மொழியை உருவாக்கிக் கொள்வதற்கான குறி மொழி ஆகும். அதாவது எச்.டி.எம்.எல் போன்ற பிற பல தேவைகளுக்குப் பயன்படும் குறி மொழிகளை வரையறை செய்ய எக்சு.எம்.எல் பயன்படுகிறது. பல துறைசார் ஆவணங்களின் தரவுகளை விபரிக்கக் கூடிய குறிமொழிகளை உருவாக்க எக்சு.எம்.எல் உதவுகிறது. இது தரவுகளை படிநிலை முறையாக ஒழுங்குபடித்தி விபரிக்கிறது.

எடுத்துக்காட்டு எக்சு.எம்.எல் ஆவணம்

தொகு
<?xml version="1.0" encoding="UTF-8"?>
<நூல்கள்>
<நூல்>
    <தலைப்பு>தமிழ் இலக்கிய வரலாறு</தலைப்பு>
    <எழுதியவர் குறிப்பு="ஆய்வாளர்">மு. வரதரசன்</எழுதியவர்>
    <முதல்_பதிப்பு>1972</முதல்_பதிப்பு>
    <பதிப்பாளர்>சாகித்திய அகாதெமி</பதிப்பாளர்>
</நூல்>
<நூல்>
    <தலைப்பு>தமிழ் மொழி வரலாறு</தலைப்பு>
    <எழுதியவர் குறிப்பு="ஆய்வாளர்">சு. சக்திவேல்</எழுதியவர்>
    <முதல்_பதிப்பு>1984</முதல்_பதிப்பு>
    <பதிப்பாளர்>மாணிக்கவாசகர் பதிப்பகம்</பதிப்பாளர்>
</நூல்>
<நூல்>
    <தலைப்பு>தமிழ் வழி அறிவியல் கல்வி</தலைப்பு>
    <எழுதியவர் குறிப்பு="ஆசிரியர்">ப. ஜெயகிருஷ்ணன்</எழுதியவர்>
    <முதல்_பதிப்பு>2003</முதல்_பதிப்பு>
    <பதிப்பாளர்>காவ்யா</பதிப்பாளர்>
</நூல்>
</நூல்கள்>

அடிப்படைக் கட்டுறுப்புகள்

தொகு

மேல் சுட்டப்பட்டது ஒரு நல்லமைவு கொண்ட ஒரு எக்சு.எம்.எல் ஆவணம் ஆகும். இந்த எக்சு.எம்.எல் ஆவணத்தில் முதல் வரி (<?xml version="1.0" encoding="UTF-8"?>) இது ஒரு எக்சு.எம்.எல் ஆவணம் என்று சுட்டிக்காட்டும் வரி ஆகும். இது எல்லா எச்.டி.எம் எல் ஆவணங்களிலும் இடம்பெற வேண்டும்.

எக்சு.எம்.எல் ஆவணத்தின் அடிப்படைப் அலகு உறுப்பு (element) ஆகும். ஒரு இரண்டு சிட்டைகளால் (tags) உருவாக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு உறுப்பும் தரவுகளை அல்லது பிற உறுப்புக்களைக் கொண்டிருக்கலாம். எ.கா <தலைப்பு>தமிழ் மொழி வரலாறு</தலைப்பு>. ஒரு உறுப்பு ஒரு தனி சிட்டையினால் பின்வருமாறு <எகா /> இருக்கலாம்.

உறுப்புகள் பற்றிய மேலதித தகவல்களைக் கூறுப் பயன்படுவன பண்புகள் (attributes) ஆகும். உறுப்புகள் பற்றி மேலதிக தகவல்களைப் இவை தருகின்றன. மேற்கூறிய எடுத்துக்காட்டில் குறிப்பு="ஆய்வாளர்" என்பது எழுதியவர் உறுப்பின் பண்பு ஆகும். பொதுவாக பயனர்களுக்கு நேரடியாக காட்சிப்படுத்தத் தேவையில்லாத தகவல்கள் பண்புகளாக வரையறை செய்யப்படும். எனினும் இது எக்சு.எம்.எல் ஆவணத்தை வடிவமைப்பரவைப் பொறுத்தது.

ஒரு உறுப்பின் இரண்டு சிட்டைகளுக்கு இடையே இடப்படும் எழுத்து பெறுமானம் (value) எனப்படுகிறது. இதுவே எக்சு.எம்.எல் கொண்டிருக்கும் தரவுகள் ஆகும். உறுப்புக்களும் பண்புகளும் இவற்றை படிநிலையாக ஒழுங்குபடுத்திப் பயன்படுத்த உதவுகின்றன.