உறுப்பு நலன் அழிதல்
திருக்குறள் > கற்பியல்
- 1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
- நறுமலர் நாணின கண்.
- 1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
- பசந்து பனிவாரும் கண்.
- 1233. தணந்தமை சால அறிவிப்ப போலும்
- மணந்தநாள் வீங்கிய தோள்.
- 1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
- தொல்கவின் வாடிய தோள்.
- 1235. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
- தொல்கவின் வாடிய தோள்.
- 1236. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
- கொடியர் எனக்கூறல் நொந்து.
- 1237. பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
- வாடுதோட் பூசல் உரைத்து.
- 1238. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
- பைந்தொடிப் பேதை நுதல்.
- 1239. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
- பேதை பெருமழைக் கண்.
- 1240. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
- ஒண்ணுதல் செய்தது கண்டு.